"

Tuesday, May 7, 2019

வரலாற்றில் இன்று மே 7 நடைபெற்ற வரலாற்று சுவடுகள்


வரலாற்றில் இன்று மே 7 உலகில் நடைபெற்ற சம்பவங்கள், முக்கிய தினங்கள், தலைவர்களின் பிறந்த நாள், அவர்களின் நினைவு நாள் மற்றும் முக்கிய வரலாற்று சுவடுகள் ஒரு தொகுப்பாக.


நிகழ்வுகள்
1697 – சுவீடனில் ஸ்டொக்ஹோம் நகரின் பழம்பெரும் அரச மாளிகை தீயில் அழிந்தது.
1840 – மிசிசிப்பியில் பெரும் சூறாவளி தாக்கியதில் 317 பேர் கொல்லப்பட்டனர்.
1895 – ரஷ்ய அறிவியலாளர் அலெக்சாண்டர் பப்போவ் உலகின் முதலாவது வானொலிக் கருவியை சென் பீட்டர்ஸ்பேர்க்கில் அறிமுகப்படுத்தினார். இந்நாள் ரஷ்யாவில் வானொலி நாளாகக் கொண்டாடப்படுகிறது.
1915 – முதலாம் உலகப் போர்: ஜெர்மனியின் யூ-20 நீர்மூழ்கிக் கப்பல் பிரித்தானியாவின் லூசித்தானியா என்ற ஆடம்பரக் கப்பலைத் தாக்கி மூழ்கடித்ததில் 1,198 பேர் கொல்லப்பட்டனர்.
1920 – போலந்துப் படைகள் உக்ரேனின் கீவ் நகரைத் தாக்கிக் க்கைப்பற்றினர். இவர்கள் பின்னர் ஒரு மாதத்தின் பின்னர் செம்படைகளினால் வெளியேற்றப்பட்டனர்.
1920 – சோவியத் ரஷ்யா ஜோர்ஜியாவை அங்கீகரித்தது. ஆனாலும் ஆறு மாதத்தின் பின்னர் அது ஜோர்ஜியாவைக் கைப்பற்றியது.


1927 – நிக்கராகுவாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
1945 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் இராணுவத் தளபதி அல்பிரட் யோட்ல் ஜெர்மனியின் நிபந்தனையற்ற சரணடைதலுக்கு பிரான்சில் கையெழுத்திட்டார்.
1946 – சோனி நிறுவனம் 20 தொழிலாளர்களுடன் டோக்கியோவில் ஆரம்பிக்கப்பட்டது.
1948 – ஐரோப்பிய அமைப்பு (Council of Europe) உருவாக்கப்பட்டது.
1952 – ஒருங்கிணைந்த மின்சுற்று (integrated circuit) தத்துவம் ஜெப்ரி டம்மர் என்பவரால் வெளியிடப்பட்டது.
1954 – வியட்நாமில் “தியன் பியன் பு” (Dien Bien Phu) சமரின் போது பிரெஞ்சுப் படைகள் தோற்கடிக்கப்பட்டது.
1992 – நாசாவின் என்டெவர் விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தது.
1999 – கினி-பிசாவுநாட்டில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் நாட்டின் அரசுத் தலைவர் ஜொவாவோ பெர்னார்டோ பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
2002 – சீனாவின் விமானம் ஒன்று மஞ்சள் கடலில் வீழ்ந்ததில் 112 பேர் கொல்லப்பட்டனர்.
2007 – ரோமப் பேரரசின் ஹெரோட் மன்னனின் கல்லறை ஜெருசலேம் நகருக்கருகில் கண்டுபிடிக்கப்பட்டது.
2007 – முன்னர் இந்தியாவுடன் இணைந்திருந்த சிறிய கண்டம் ஒன்று தெற்குக் கடல்களின் அடியில் தமது ஆய்வுக் கப்பலான போலார்ஸ்டேர்ன் (the Polarstern), கண்டுபிடித்துள்ளதாக ஜெர்மனிய அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
2007 – நாடு கடந்த நிலையில் வாழ்ந்த வங்காள தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாடு திரும்பினார்.
பிறப்புக்கள்
1840 – பியோத்தர் த்சாய்க்கோவ்ஸ்கி, ரஷ்ய இசையமைப்பாளர் (இ. 1893)
1861 – இரவீந்திரநாத் தாகூர், வங்காள மொழிக் கவிஞர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1941)
1968 – கிருஷ்ணா டாவின்சி, தமிழக எழுத்தாளர், இதழாளர் (இ. 2012)
இறப்புகள்
1825 – அந்தோனியோ சாலியரி, இத்தாலிய இசையறிஞர் (பி. 1750)
1964 – பி. கண்ணாம்பா, தமிழ்த்திரைப்பட நடிகை (பி. 1910)
1998 – அலன் கோர்மாக், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1924);
சிறப்பு நாள்
ரஷ்யா, பல்கேரியா – வானொலி நாள்
நோர்வே – தேசிய நாள்.

No comments:

Post a Comment

Adbox