"

Monday, May 20, 2019

வரலாற்றில் இன்று மே 20 நடைபெற்ற வரலாற்று சுவடுகள்


வரலாற்றில் இன்று மே 20  உலகில் நடைபெற்ற சம்பவங்கள், முக்கிய தினங்கள், தலைவர்களின் பிறந்த நாள், அவர்களின் நினைவு நாள் மற்றும் முக்கிய வரலாற்று சுவடுகள் ஒரு தொகுப்பாக.

நிகழ்வுகள்
526 – சிரியாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 300,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1498 – போர்த்துக்கீச மாலுமி வாஸ்கொ ட காமா இந்தியாவின் கோழிக்கோடு நகரை அடைந்தார்.
1570 – உலகின் முதலாவது நவீன நிலவரையை (atlas) ஆபிரகாம் ஓர்ட்டேலியஸ் வரைந்தார்.
1605 – ரோமைச் சேர்ந்த கத்தோலிக்க குரு தத்துவ போதக சுவாமிகள் கோவா வந்து சேர்ந்தார்.
1631 – முப்பதாண்டுப் போர்: ஜெர்மனியின் மாக்டெபூர்க் நகரை புனித ரோமப் பேரரசு கைப்பற்றி நகர மக்களின் பெரும்பான்மையோரைப் படுகொலை செய்தனர்.
1813 – நெப்போலியன் பொனபார்ட் பிரெஞ்சுப் படைகளுடன் ஜேர்மனியின் சாக்சனி நகரில் நுழைந்து ரஷ்யா, மற்றும் புரூசியாப் படைகளுடன் போரில் ஈடுபட்டு வெற்றி பெற்றான்.
1869 – யாழ்ப்பாணத்தில் தொலைத்தொடர்பு இணைப்பு வேலை நிறைவடைந்தது.
1873 – லேவி ஸ்ட்ராவுஸ், ஜேக்கப் டாவிஸ் ஆகியோர் இணைந்து செப்புத் தட்டாணியுடனான நீல ஜீன்சுக்கான காப்புரிமம் பெற்றனர்.
1882 – ஜெர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி, மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் முத்தரப்புக் கூட்டணியை ஏற்படுத்தின.
1891 – தொமஸ் அல்வா எடிசன் தனது முதலாவது உடல் அசைவு ஒளிப்படக்கருவியைக் காட்சிப்படுத்தினார்.
1902 – ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து கியூபா விடுதலை பெற்றது. தொமாஸ் எஸ்ட்ராடா பால்மா முதலாவது அரசுத் தலைவரானார்.
1940 – முதல் தொகுதி சிறைக்கைதிகள் அவுஷ்விட்ஸ் வதை முகாமை வந்தடைந்தனர்.
1949 – குவோமிங்தான் அரசு தாய்வானில் இராணுவ ஆட்சியை அறிமுகப்படுத்தியது.
1965 – எகிப்தில் கெய்ரோ நகரில் பாகிஸ்தான் விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் 119 பேர் கொல்லப்பட்டனர்.
1980 – கியூபெக் மாநிலத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் கனடாவில் இருந்து விடுதலை பெறுவதற்கு எதிராக 60 விழுக்காட்டினர் வாக்களித்தனர்.
1983 – எயிட்ஸ் நோயை உண்டாக்கும் கிருமிகளைக் கண்டுபிடித்த செய்திகள் முதற் தடவையாக வெளியிடப்பட்டன.
1995 – கியூபெக் மாநிலத்தில் இடம்பெற்ற இரண்டாவது வாக்கெடுப்பில் கனடாவில் இருந்து விடுதலை பெறுவதற்கு எதிராக பெரும்பான்மையானோர் வாக்களித்தனர்.
1999 – புளூடூத் (Bluetooth) வெளியிடப்பட்டது.
2002 – கிழக்குத் தீமோரின் விடுதலையை போர்த்துக்கல் அங்கீகரித்தது. 23 ஆண்டுகால இந்தோனீசிய ஆட்சி, மற்றும் மூன்றாண்டு கால ஐநாவின் தற்காலிக ஆட்சி முடிவுக்கு வந்து கிழக்குத் திமோர் விடுதலை பெற்றது.
பிறப்புக்கள்
1799 – பல்சாக், பிரெஞ்சு எழுத்தாளர் (இ. 1850)
1845 – அயோத்தி தாசர், தமிழறிஞர் (இ. 1914)
1860 – எடுவர்டு பூக்னர், ஜெர்மனிய வேதியியல் அறிஞர் (இ. 1917)
1894 – சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், காஞ்சி காமகோடி பீட குரு (இ. 1994)
1939 – பாலுமகேந்திரா, தமிழ்த் திரைப்பட இயக்குநர் (இ. 2014)
1954 – ராசன் பி.தேவ், மலையாள நடிகர் (இ 2009)
இறப்புகள்
2005 – செம்பியன் செல்வன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1943)
1506 – கிறிஸ்தோபர் கொலம்பஸ், இத்தாலியக் கடல் பயணி (பி. 1451)
1947 – பிலிப் லெனார்ட், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1862)
1957 – த. பிரகாசம், இந்திய சுதந்தர போராட்ட வீரர், சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வர். (இ. 1872)
    2008 – பால்ராஜ், விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி (பி. 1965)
சிறப்பு நாள்
கமரூன் – தேசிய நாள்.
கிழக்குத் தீமோர் – விடுதலை நாள்.

No comments:

Post a Comment

Adbox