மூலிகையை உணவாக்கி உணவையே மருந்தாக்கி வாழ்ந்தவர்கள் நம் தமிழர்கள். அந்த வகையில் இன்று சித்தரத்தை பயன்கள் பற்றி தெரிந்துகொள்ள உள்ளோம். இஞ்சியை போன்ற ஒருவகை இந்த சித்தரத்தை இந்தியா, கிழக்காசிய நாடுகளில் அதிகம் விளையும் ஒரு மூலிகையாக “சித்தரத்தை” இருக்கிறது. இதற்கு “சீன இஞ்சி” என்கிற ஒரு பெயரும் உண்டு. இந்த சித்தரத்தை எத்தகைய நோய்களையெல்லாம் போக்குகிறது என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை என்பது போலவே இருமலுக்கு உகந்த மருந்து சித்திரத்தை.குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தம், இளைப்பு, சளி, வறட்டு இருமல், வாயு கோளாறுகள், வாய் துர்நாற்றம், ஈறுகள் பாதுகாப்பு, காய்ச்சல், சுவாச கோளாறுகள், மூட்டுவலி, தசைபிடிப்பு போன்றவற்றை விரட்டும் தன்மையைக் கொண்டது சித்தரத்தை. சளிக்கு காரணமான சால்மோனெல்லா. ஸ்ட்ரெப்டோ காக்கஸ் போன்ற நுண்ணுயிரிகளை எதிர்க்கும் எதிர் நுண்ணுயிரிகளைக் கொண்டிருக்கிறது சித்தரத்தை என்பதை மருத்துவ விஞ்ஞானிகள் நிரூபித்திருக்கிறார்கள்.
ஆஸ்துமா நுரையீரலை பாதித்து சுவாசிக்கும் போது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தக்கூடிய நோயாக ஆஸ்துமா நோய் இருக்கிறது. இந்நோய் பாதிப்பு கொண்டவர்கள் மற்ற மருந்துகளை எடுத்துக்கொள்ளும் போது தினமும் சித்தரத்தை, அதிமதுரம், தாளிசபத்திரி, திப்பிலி மற்றும் மிளகு ஆகிய மூலிகைகளை இலேசாக வறுத்து, அரைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு, தினமும் இதில் சிறிதளவு எடுத்து, தேனில் குழைத்து சாப்பிட்டு வருவர்களேயானால் அவர்களின் ஆஸ்துமா நோயின் தீவிரம் குறைந்து, சுவாசிப்பதில் சிரமங்கள் ஏற்படாமல் தடுக்கும்.
பலரும் சரியாக காலை உணவுகளை சாப்பிடாததால் வயிறு மற்றும் குடல்களில் அல்சர் புண்கள் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். சித்தரத்தை பொடியை நீரில் போட்டு நன்கு கலக்கி இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் அரிசி கஞ்சியுடன் அந்நீரை சேர்த்து பருகி வந்தால் வயிறு மற்றும் குடல்களில் இருக்கும் அல்சர் புண்கள் குணமாகும். வயிற்றில் ஏற்படும் பிற பிரச்சனைகளுக்கு சித்தரத்தையை பொடி பதத்தில் சாப்பிடுவது சிறந்த பலனை தரும்.
ஒரு சிலருக்கு ஒவ்வாமையினாலும், கடலில் பயணம் மேற்கொள்ளும் போதும் வயிற்றில் செரடோனின் அமிலங்களை அதிகம் சுரந்து வாந்தி ஏற்படுகிறது. இப்பிரச்சனையை போக்க உலர்ந்த சித்தரத்தை துண்டு ஒன்றை எடுத்து, வாயில் இட்டு சுவைக்க, நாக்கில் காரம் கலந்த விறுவிறுப்பு தன்மை ஏற்பட்டு சுரக்கும் உமிழ்நீரை அப்படியே விழுங்கினால் குமட்டல், வாந்தி பாதிப்புகள் நீங்கும்.
மூட்டுவலி பிரச்சனைகள் வாதம் என்பது உடலின் காற்றின் தன்மை அதிகரிப்பதால் உடலின் அனைத்து பகுதிகளிலிருக்கும் மூட்டு பகுதிகளில் வலி உண்டாவதோடு விறைப்புத்தன்மை ஏற்படுகிறது. சித்தரத்தை தூளை கலந்த நீரில் கலந்து இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் பருகி வந்தால் மூட்டு வலிகள் நீங்கும். உடலின் வாதத்தன்மை அதிகரிப்பை கட்டுக்குள் கொண்டு வரும்.
தொண்டை சித்தரத்தையை சிறிதளவு எடுத்து வாய்க்குள் போட்டு அதக்கி கொள்வதால் அதிகளவு உமிழ்நீர் சுரக்கும். இந்த உமிழ்நீர் சிறிது சிறிதாக தொண்டைக்குள் இறங்கி தொண்டையில் சளித்தொல்லையால் ஏற்படும் குரல் கரகாரப்பை நீக்கும். சளியால் ஏற்படும் தொண்டைகட்டையும் சீக்கிரத்தில் குணமாகும்.
மலச்சிக்கல் பலருக்கும் காலை நேரத்தில் மலச்சிக்கல் காரணமாக மலம் சரியாக கழிக்க முடியாமல் பிரச்சனை ஏற்படுகிறது. இதை போக்க சிறிதளவு சித்தரத்தையை எடுத்து, நன்கு இடித்து சலித்து வைத்து கொண்டு இரவு தூங்கும் முன்பு ஒரு சிட்டிகை அளவு பசுப்பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை சுலபத்தில் நீங்கும்.
குழந்தைகள் சிறுகுழந்தைகளுக்கு சமயங்களில் மாந்தம் மற்றும் இளைப்பு சளி நோய்கள் ஏற்படுகின்றன. இதை போக்குவதற்கு, சித்தரத்தை துண்டை விளக்கெண்ணையில் தோய்த்து நெருப்பில் இட்டு கரியாக்கி, அதை தேனில் தேய்க்க உண்டாகும் தேன் கலந்த தூளை, கைக்குழந்தைகளுக்கு நாக்கில் தடவி வந்தால் இந்த மாந்த நோய் மற்றும் சளி போன்றவை குணமாகும்.
சித்தரத்தை ஒரு சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. சித்தரத்தை அமிலத்தன்மை மிக்க ஒரு மூலிகை பொருளாகும். சிறு குழந்தைகள் மற்றும் தோற்று நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு தினமும் சிறிது சித்தரத்தை கலந்த நீரை பருகுவதற்கு கொடுத்து வந்தால் அவர்களின் உடலில் இருக்கும் கிருமிகள் அழிந்து உடல் நலம் தேற பெறுவார்கள்.
No comments:
Post a Comment