வரலாற்றில் இன்று மே 13 உலகில் நடைபெற்ற சம்பவங்கள், முக்கிய தினங்கள், தலைவர்களின் பிறந்த நாள், அவர்களின் நினைவு நாள் மற்றும் முக்கிய வரலாற்று சுவடுகள் ஒரு தொகுப்பாக.
நிகழ்வுகள்
1619 – டச்சு அரசியல்வாதி ஜொகான் வன் ஓல்டென்பார்னவெல்ட் ஹேக் நகரில் நாட்டுத்துரோகக் குற்றச்சாட்டின் பேரில் தூக்கிலிடப்பட்டார்.
1648 – டில்லியில் செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது.
1765 – யாழ்ப்பாணத்தின் டச்சுத் தளபதியாக அந்தனி மூயார்ட் நியமிக்கப்பட்டான்.
1787 – ஆஸ்திரேலியாவில் குடியேற்றத்தை ஆரம்பிப்பதற்கென 11 கப்பல்களில் 772 சிறைக்கைதிகளையும் குற்றவாளிகளையும் ஏற்றிக் கொண்டு கப்டன் ஆர்தர் பிலிப் இங்கிலாந்தை விட்டுப் புறப்பட்டார்.
1830 – எக்குவாடோர் விடுதலை அடைந்தது.
1846 – ஐக்கிய அமெரிக்கா மெக்சிக்கோ மீது போரை அறிவித்தது.
1861 – பெரும் வால்வெள்ளி ஒன்று ஆஸ்திரேலியாவில் அவதானிக்கப்பட்டது.
1880 – நியூ ஜேர்சியில் மென்லோ பூங்காவில் எடிசன் மின்சாரத்தில் இயங்கும் தனது முதலாவது தொடருந்தை சோதித்தார்.
1888 – பிரேசில் அடிமைமுறையை இல்லாதொழித்தது.
1913 – நான்கு இயந்திரங்களினால் ஆன முதலாவது விமானத்தை ஈகர் சிபோர்ஸ்கி என்ற ரஷ்யர் இயக்கினார்.
1940 – இரண்டாம் உலகப் போர்: நெதர்லாந்தினுள் நாசி ஜெர்மனியர் புகுந்ததை அடுத்து அதன் அரசி வில்ஹெல்மேனியா பிரித்தானியாவுக்கும் இளவரசி ஜூலியானா தனது குழந்தைகளுடன் கனடாவுக்கும் தப்பி ஓடினர்.
1943 – இரண்டாம் உலகப் போர்: வட ஆபிரிக்காவில் ஜெர்மனிய மற்றும் இத்தாலியப் படையினர் கூட்டுப் படைகளிடம் சரணடைந்தனர்.
1952 – இந்தியப் பாராளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையின் முதலாவது அமர்வு இடம்பெற்றது.
1954 – சிங்கப்பூரில் தேசியத்துக்கு எதிராக சீனப் பாடசாலை மாணவர்களின் போராட்டம் இடம்பெற்றது.
1960 – உலகின் ஏழாவது உயர மலையான தவுளகிரியின் உச்சியை சுவிட்சர்லாந்து மலையேறிகள் இருவர் முதன் முதலில் அடைந்தனர்.
1967 – சாகிர் உசேன் இந்தியாவின் முதலாவது முஸ்லிம் குடியரசுத் தலைவர் ஆனார்.
1969 – மலேசியாவில் கோலாலம்பூரில் சீனர்களுக்கும் மலே இனத்தவர்களுக்கும் இடையில் இனக்கலவரம் மூண்டது. 190 பேர் கொல்லப்பட்டனர்.
1981 – ரோமில் திருத்தந்தை இரண்டாவது ஜோன் போலைக் கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.
1989 – சீனாவில் தியனன்மென் சதுக்கத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் உண்ணாநோன்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
1996 – வங்காள தேசத்தில் வீசிய கடும் புயலில் சிக்கி 600 பேர் வரையில் இறந்தனர்.
1997 – இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தனர்.
1998 – இந்தோனீசியாவின் ஜகார்த்தாவில் சீனர்களுக்கெதிராக இனக்கலவரம் ஆரம்பமானது.
1998 – இந்தியா மேலும் இரண்டு அணுகுண்டுச் சோதனைகளை மேற்கொண்டது. இந்தியா மீது ஐக்கிய அமெரிக்கா, மற்றும் ஜப்பான் பொருளாதாரத் தடையைக் கொணர்ந்தன.
2005 – உஸ்பெக்கிஸ்தானில் அண்டிஜான் என்ற இடத்தில் காவற்துறையினர் போராட்டக் காரர் மீது சுட்டதில் 187 பேர் கொல்லப்பட்டனர்.
2006 – அல்லைப்பிட்டி படுகொலைகள், 2006: யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில் 13 பொதுமக்களை இலங்கைக் கடற்படையினர் படுகொலை செய்தனர்.
2006 – திமுக தலைவர் மு. கருணாநிதி 5வது முறையாக தமிழக முதல்வர் பதவியை ஏற்றார்.
2007 – திருகோணமலை மொறவேவாப் பகுதியில் பொங்குதமிழ் உட்படப் பலநிகழ்வுகளில் முன்னின்று கலந்துகொண்ட வணகத்துக்குரிய நந்தரத்ன தேரோ இனம் தெரியாதோரால் படுகொலை செய்யப்பட்டார்.
பிறப்புக்கள்
1882 – ஜோர்ஜெஸ் பிராக், பிரெஞ்சு ஓவியர் (இ. 1963)
1905 – பக்ருதின் அலி அகமது, இந்தியக் குடியரசுத் தலைவர், (இ. 1977)
1918 – பாலசரஸ்வதி, பரத நாட்டிய மேதை (இ. 1984)
1956 – ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், இந்திய குரு
1978 – மைக் பிபி, அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
இறப்புகள்
1898 – பி. ஆர். ராஜமய்யர், தமிழ் எழுத்தாளர் (பி. 1872)
1978 – வி. தெட்சணாமூர்த்தி, தவில் மேதை (பி. 1933)
2000 – தாராபாரதி தமிழ்க்கவிஞர் (பி.1947)
2001 – ஆர். கே. நாராயண், இந்திய நாவலாசிரியர் (பி. 1906).
No comments:
Post a Comment