தினசரி நாம் பல வகையான பூக்களை அழகுக்காகவும் வாசனைக்காகவும் வீடுகள் மற்றும் அலுவலங்களில் பயன்படுத்துகிறோம்.
ஆனால், பூக்களிலும் நமது உடலுக்கு தேவையான சத்துக்கள் உள்ளது என்பது தெரியமா..? நாம் உண்ணும் தேன் இதில் இருந்துதான் தேனீக்கள் வழியாக கிடைக்கிறது. மலர்களில் பல்வேறு மருத்துவ குணங்களும், சத்துக்கள் நிறைந்து உள்ளது.
தற்போது நாம் இந்த பதிவில் செவ்வந்தி பூவில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்.
தலைவலி
தலைவலி உள்ளவர்கள் செவ்வந்தி பூவின் இதழ்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து, அந்த பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், தலைவலி நீங்கி விடும்.
மலசிக்கல்
இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கக்கூடிய பிரச்சனையில் ஒன்று தான் இந்த மலசிக்கல் பிரச்னை. மலசிக்கல் பிரச்னை உள்ளவர்கள், செவ்வந்தி பூவில் கசாயம் செய்து, அதனுள் பனைவெல்லம் கலந்து குடித்து வந்தால், மலசிக்கல் நீங்கி விடும்.
உடல் சூடு
உடல் சூடு பிரச்னை உள்ளவர்கள், செவ்வந்தி பூவை கசாயம் செய்து குடித்து வந்தால், உடல் சூடு தணிந்து விடும்.
வீக்கம்
உடலில் எந்த இடத்தில வீக்கம் இருந்தாலும், வீக்கம் உள்ள பகுதியில், செவ்வந்தி பூவை கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை எடுத்து ஒத்தடம் கொடுத்து வந்தால் வீக்கம் குறைந்து விடும்.
No comments:
Post a Comment