"

Saturday, May 11, 2019

வரலாற்றில் இன்று மே 11 நடைபெற்ற வரலாற்று சுவடுகள்

வரலாற்றில் இன்று மே 11 உலகில் நடைபெற்ற சம்பவங்கள், முக்கிய தினங்கள், தலைவர்களின் பிறந்த நாள், அவர்களின் நினைவு நாள் மற்றும் முக்கிய வரலாற்று சுவடுகள் ஒரு தொகுப்பாக.

நிகழ்வுகள்
1502 – கொலம்பஸ் தனது கடைசியும் கடைசியுமான கடற் பயணத்தை மேற்கிந்தியத் தீவுகளுக்கு ஆரம்பித்தார்.
1812 – லண்டனில் நாடாளுமன்றத்தில் வைத்து பிரதமர் ஸ்பென்சர் பேர்சிவல் ஜோன் பெல்லிங்ஹம் என்பவனால் கொல்லப்பட்டார்.
1857 – இந்தியக் கிளர்ச்சி, 1857: இந்தியப் புரட்சியாளர்கள் டெல்லியை பிரித்தானியர்களிடம் இருந்து கைப்பற்றினர்.
1867 – லக்சம்பேர்க் விடுதலை அடைந்தது.
1891 – ஜப்பானில் பயணம் மேற்கொண்டிருந்த ரஷ்ய மன்னர் இரண்டாம் நிக்கலாஸ் கொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பினார்.

1905 – அல்பேர்ட் ஐன்ஸ்டீன் பிரௌனியன் இயக்கம் பற்றிய தனது விளக்கத்தை வெளியிட்டார்.
1924 – மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் காட்லீப் டைம்லர், கார்ல் பென்ஸ் ஆகியோரினால் ஆரம்பிக்கப்பட்டது.
1943 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் அலூசியன் தீவுகளின் அட்டு தீவைக் கைப்பற்றினர்.
1949 – சியாம் நாடு தாய்லாந்து எனப் பெயர் மாற்றம் பெற்றது.
1949 – ஐக்கிய நாடுகள் அவையில் இசுரேல் இணைந்தது
1953 – டெக்சாசில் இடம்பெற்ற சூறாவளியில் 114 பேர் உயிரிழந்தனர்.
1960 – முதலாவது கருத்தடை மாத்திரை அறிமுகமானது.
1985 – இங்கிலாந்தில் உதைப்பந்தாட்ட போட்டியொன்றில் அரங்கில் இடம்பெற்ற தீயினால் 56 பார்வையாளர்கள் கொல்லப்பட்டனர்.
1987 – முதலாவது இதய மாற்றுச் சத்திர சிகிச்சை மேரிலாந்தில் நடத்தப்பட்டது.
1997 – ஐபிஎம் இன் ஆழ் நீலக் கணினி முதன் முதலாக காரி காஸ்பரவை சதுரங்க ஆட்டத்தில் தோற்கடித்தது.
1998 – இந்தியா பொக்ரானில் மூன்று அணுச் சோதனைகளை நடத்தியது.

பிறப்புக்கள்
1895 – ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி இந்தியத் தத்துவஞானி (இ. 1986)
1897 – சுத்தானந்த பாரதியார், கவியோகி (இ. 1990)
1897 – ஜார்ஜ் பீட்டர் மர்டாக், மானிடவியலாளர் (இ. 1985)

இறப்புகள்
1976 – அல்வார் ஆல்ட்டோ, பின்லாந்து கட்டிடக்கலைஞர் (பி. 1898)
சிறப்பு நாள்
தேசீய தொழில் நுட்ப தினம் – இந்தியா.

No comments:

Post a Comment

Adbox