"

Friday, May 10, 2019

பல்வேறு வியாதிகளை குணப்படுத்தும் தன்மை கொண்ட மூக்கிரட்டை கீரையின் நற்பண்புகளை இப்போதாவது தெரிந்து கொள்ளுங்கள்

அளப்பரிய நற்பலன்கள் கொண்ட மூக்கிரட்டை கீரை உள்ள நன்மைகள்


இயற்கை மருத்துவத்தில் இன்று  மூக்கிரட்டை கீரை பற்றி பார்ப்போம். சாலை யோரங்களில் காணும் சில செடிகள், மிகப்பெரும் ஆற்றல் வாய்ந்தவை என்பதை அவற்றின் அளப்பரிய நற்பலன்கள் உள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும். 

அப்படிபட்ட செடிகளில் ஒன்று மூக்கிரட்டை, இது  எதன் மீதும் பற்றிப் படராமல், நிலத்தில் படர்ந்து, தன் தனித் தன்மையை நிரூபித்து வளரும் ஒரு செடிதான், மூக்கிரட்டை. அடர் நீல வண்ணத்திலும், வெண்மை வண்ணத்திலும் பூக்கும் மலர்களைக் கொண்ட இருவேறு விதமான மூக்கிரட்டை செடிகளை காணமுடிம். 


மூக்கிரட்டை இலைகள் கீரையாக சமைத்து உண்ணப்படுகிறது. இது பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது. குறிப்பாக கல்லீரல் பிரச்சினை,இதய நோய்கள், சிறுநீர்ப்பாதை தொற்று, உடல் பருமன், நீரிழிவு,  கண்கள் நோய்களை குணப்படுத்தும் கொண்ட ஒரு தாவரம் மூக்கிரட்டை.இதை வாரத்தில் ஒரு நாள் சாப்பிடலாம். 


மூக்கிரட்டை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.
  
சளியும், மூச்சுத் திணறலும் இருப்பவர்கள்  மூக்கிரட்டை வேரை சற்று  இடித்து, ஒரு தம்ளர் நீரில் காய்ச்சி, அதில் சிறிது மிளகுத்தூள் கலந்து பருக, சளி மற்றும் மூச்சுத் திணறல் பாதிப்புகள் சரியாகி விடும்.

கோடை காலத்தில் நீர்க்கடுப்பு அதிகமாகவே இருக்கும். அதைத் தடுத்து சிறுநீர் மென்மையாக வெளியேற்றுவதற்கு இந்த மூக்கிரட்டை பயன்படுகிறது.மூக்கிரட்டை இலையில் இருக்கும் சாறு ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. அதோடு நமக்குத் தேவையான பிளாஸ்மா இன்சுலின் அளவை அதிகரிக்கச் செய்து, நீரிழிவு நோயைத் தடுக்கிறது

.

மூக்கிரட்டை கீரையானது கல்லீரலின் செயல்பாட்டைத் தூண்டிவிட்டு, வேகமாகவும் துரிதமாகவும் செயல்பட உதவுகிறது.கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு சிறுநீர்ப் பாதை தொற்று அதிகமாகவே இருக்கும். அந்த சமயங்களில் மூடு இந்த கீரை எடுத்துக் கொள்ளலாம். எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது.மூக்கிரட்டை கீரை உடம்பில் உள்ள அதிகப்படியான கழிவுகளை நீக்கி, உடலுக்கு ஆற்றலைத் தரக்கூடிய பொட்டாசியம், எலக்ட்ரோலைட்ஸ்களை சேமித்து எடையைக் குறைக்க உதவுகிறது.

வயிற்றுப் பிரச்சினைகள், ஜீரணக் கோளாறு, வயிற்றுப் புழுக்கள் போன்ற அனைத்து பிரச்சினைகளையும் சரிசெய்து விடும் ஆற்றல் இந்த மூக்கிரட்டை கீரைக்கு உண்டு.

மூக்கிரட்டை வேரை சிறிது எடுத்து ஒரு தம்ளர் நீரில் இட்டு, அதில் சிறிது சோம்பு சேர்த்து, காய்ச்சி, ஆற வைத்து, தினமும் பருகி வர, பக்க விளைவுகள் ஏதுமின்றி, பாதிப்புகள் மெல்ல விலகும், சிறுநீர் அடைப்பை நீக்கி, சிறுநீரகத்தைக் காத்து, சிறுநீரகக் கற்களையும் கரைத்து வெளியேற்றும் தன்மை மிக்கது.

மூக்கிரட்டை வேரைத் தூளாக்கி, அதை தினமும் இருவேளை தேனில் கலந்து சிறிதளவு சாப்பிட்டு வர, மங்கலாகத் தெரியும் கண் பார்வைக் குறைபாடு மற்றும் மாலைக்கண் பாதிப்புகள் போன்ற கண் வியாதிகள் யாவும் விலகி விடும்.

மூக்கிரட்டை சமூலம் எனும் முழுச் செடியையும் உலர்த்தி, தூளாக்கி, தினமும் இரு வேளை, சாப்பிட்டு வர, மலச்சிக்கல் நீங்கி உடல் புத்துணர்வாகி, இளமைப்பொலிவுடன் காணப்படும்.

புற்று நோய்கள் புற்று வியாதிகளை ஏற்படுத்தும் நச்சுக் கிருமிகளை அழிக்கும், தொற்று வியாதிகளின் பாதிப்பை சரி செய்யும், உடல் திசுக்களை சரி செய்து, உடலில் ஏற்படும் முதுமைத் தன்மையை போக்கி, உடல் இளமையை தக்க வைக்கும்.

No comments:

Post a Comment

Adbox