"

Friday, April 26, 2019

கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்கும் பூ ஜாடியை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது...!


நெருப்பை அணைக்க கூடிய பூ ஜாடி ஒன்றினை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 


அழகிய பூ ஜாடியை பூச் செடிகளை வளர்ப்பதற்கு தான் பயன்படுத்துவோம்.

ஆனால் இன்று தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள அழகிய பூ ஜாடியானது பூக்களை தாங்கிக் கொள்ளக் கூடிய ஒரு குடுவை போன்ற அமைப்பு மட்டும் அல்லாமல் தீயை அணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பூ ஜாடியின் ஊடாகவே ஒரு பகுதியில் பொட்டாசியம் கார்பனேட் திரவம் நிரப்பப்பட்டுள்ளது. பொதுவாக பொட்டாசியம் கார்பனேட் ஆக்சிஜனின் அழுத்தத்தைக் குறைத்து நெருப்பை வர விடாமல் தடுக்கக்கூடிய பண்பை பெற்றிருக்கக் கூடியது. 


இந்த பூ ஜாடியில் இந்த திரவமானது குடுவை போன்ற பகுதிகளில் நிரப்பப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதன் மேற்பகுதியில் பொதுவான பகுதியில் அழகிய பூச்செடிகளை நாம் வளர்த்துக் கொள்ளலாம். இந்த பூ ஜாடி ஆனது வீடு மற்றும் அலுவலகங்களில் ஏதேனும் தீ விபத்து நடைபெறும் பொழுது உடனடியாக அதனை தூக்கி எறிவது என் மூலமாக அந்த குடுவை உடைந்து  திரவமானது வெளியேறி  தீயை கட்டுப்படுத்தும்.

இந்த அழகிய பூ ஜாடி கொடூரமான தீயினை கட்டுப்படுத்த மிகவும் பயன் அளிக்க வல்லது என சாம்சங் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மிகவிரைவில் சந்தையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Adbox