"

Saturday, April 6, 2019

வரலாற்றில் இன்று ஏப்ரல் 6 நடைபெற்ற வரலாற்று சுவடுகள்

வரலாற்றில் இன்று ஏப்ரல் 6 உலகில் நடைபெற்ற சம்பவங்கள், முக்கிய தினங்கள், தலைவர்களின் பிறந்த நாள், அவர்களின் நினைவு நாள் மற்றும் முக்கிய வரலாற்று சுவடுகள் ஒரு தொகுப்பாக.


நிகழ்வுகள்
கிமு 648 – ஆரம்பகால சூரிய கிரகணம் கிரேக்கர்களால் பதியப்பட்டது.
1782 – தாய்லாந்து மன்னன் டாக்சின் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டான். முதலாம் ராமா மன்னனாக முடி சூடினான்.
1814 – நெப்போலியன் பொனபார்ட் பதவியில் இருந்து அகற்றப்பட்டு எல்பா தீவுக்கு நாடு கடத்தப்பட்டான்.
1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ரிச்மண்ட் நகரில் ஏற்பட்ட தோல்வியின் பின்னர் கூட்டமைப்பின் இராணுவத்தினர் தமது கடைசிச் சமரை வடக்கு வேர்ஜீனியாவில் நடத்தினர்.
1869 – செலுலோயிட் கண்டுபிடிக்கப்பட்டது.

1896 – 1,500 ஆண்டுகளாக ரோம் பேரரசர் முதலாம் தியோடோசியசினால் தடைசெய்யப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் முதற்தடவையாக கிரேக்கத்தின் ஏதன்ஸ் நகரில் ஆரம்பமாயின.
1917 – முதலாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கா ஜெர்மனி மீது போரை அறிவித்தது.
1919 – மகாத்மா காந்தி பொது வேலை நிறுத்ததை அறிவித்தார்.
1936 – ஐக்கிய அமெரிக்கா, ஜோர்ஜியாவில் சுழற்காற்று தாக்கியதில் 203 பேர் கொல்லப்பட்டனர்.
1941 – இரண்டாம் உலகப் போர்: யூகொஸ்லாவியா மற்றும் கிரேக்கத்தை ஜெர்மனி முற்றுகையிட்டது.
1965 – “ஏளி பேட்” (Early Bird) என்ற தொடர்பாடற் செய்மதி விண்ணில் ஏவப்பட்டது.
1968 – இண்டியானா மாநிலத்தில் இடம்பெற்ற இரட்டைக் குண்டுவெடிப்புகளில் 41 பேர் கொல்லப்பட்டு, 150 காயமடைந்தனர்.
1973 – பயனியர் 11 விண்ணுக்கு ஏவப்பட்டது.
1994 – ருவாண்டா மற்றும் புருண்டி அதிபர்கள் பயணம் செய்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து ருவாண்டாவில் இனப்படுகொலைகள் ஆரம்பமானது.
1998 – இந்தியாவைத் தாக்கக்கூடியதான நடுத்தர ஏவுகணைகளை பாகிஸ்தான் சோதித்தது.
2005 – குர்தியத் தலைவர் ஜலால் தலபானி ஈராக் அதிபரானார்.

பிறப்புகள்
1483 – ராபியேல் சான்சியோ, இத்தாலிய ஓவியர் (இ. 1520)
1815 – மீனாட்சி சுந்தரம் பிள்ளை, தமிழறிஞர் (இ. 1876
1901 – பியர் ஜார்ஜியோ ஃபிராசாதி, இத்தாலிய ஆர்வலர் (இ. 1925)
1928 – ஜேம்ஸ் டூயி வாட்சன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்
1931 – சுசித்ரா சென், வங்காளத் திரைப்பட நடிகை (இ. 2014)
1938 – கோ. நம்மாழ்வார், இயற்கை ஆர்வலர் (இ. 2013)
1956 – திலீப் வெங்சர்கார், இந்தியத் துடுப்பாளர்

1963 – ராஃபாயெல் கொறேயா, எக்குடோர் அரசுத்தலைவர்

இறப்புகள்
1199 – இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் (பி. 1157)

1520 – ராபியேல் சான்சியோ, இத்தாலிய ஓவியர் (பி. 1483)
1528 – ஆல்பிரெஃக்ட் டியுரே, செருமானிய ஓவியர் (பி. 1471)
1971 – இகோர் ஸ்ட்ராவின்ஸ்கி, உருசிய-அமெரிக்க இசையமைப்பாளர் (பி. 1882)
1992 – ஐசாக் அசிமோவ், உருசிய-அமெரிக்க எழுத்தாளர் (பி. 1920)
2011 – சுஜாதா, தமிழ்த் திரைப்பட நடிகை (பி. 1952)

No comments:

Post a Comment

Adbox