"

Sunday, March 10, 2019

நாம் மறந்த நம் தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் வகைகளின் பட்டியல் அவற்றின் பயன்கள்


தமிழ்நாட்டின் காவிரி ஆற்றுப் பகுதியை, தென் இந்தியாவின் நெற்களஞ்சியம் என புகழ்பெற்றுள்ளது. அரசர்கள் ஆண்ட காலத்தில் சுமார் 400 வகையான நெல் வகைகள் இருந்துள்ளதாகவும், அரிசி, ஒவ்வொரு தனிமனிதனின் விழா, பிறப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றின் அத்தியாவசிய அங்கமாகும்.


அரியான் (Ariyaan) என்று அழைக்கப்படும் இந்த நெல் வகை, தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் வகையாகும். தமிழகத்தின், ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள, மணற்பாங்கானப் பிராந்தியமாகக் காணப்படும்.120 நாட்களில் வறட்சியைத் தாங்கி மிக உயரமாக 5,½ - 6,½ அடி வரையில் வளரக்கூடிய இந்த நெல் இரகம், கடலோரப்பகுதிகளிலும், மற்றும் ஆற்றுப்படுகைகளிலும் காணப்படும்.

அறுபதாம் குறுவை (Arubatham Kuruvai) எனப்படும் இந்த நெல் வகை, தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் வகையாகும். ஒரு ஆண்டுக்கு ஜந்து போகம் சாகுபடி செய்யக்கூடிய இந்த நெல் வகை, அறுபது நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது.

அன்னமழகி (Annamazhagi) பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றான இது, புல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். மிகவும் இனிப்பு சுவையுள்ள‌ இந்த நெல் (அரிசி), சகல சுரங்களையும், பித்த வெப்பத்தையும் போக்க கூடியதாகவும், மனித உடலுக்கு சுகத்தை கொடுக்க வல்லதாகவும் உள்ளது. மேலும், இந்த அரிசியைச் சமைத்து மோர் சேர்த்து உண்டால் சிறுநீர் கழிப்பதால் ஏற்படும் எரிச்சல், தண்ணீர் தாகம், வயிற்றுப்போக்கு போன்றவைகளைப் போக்கும் எனக் கூறப்படுகிறது. இரவில் நீரூற்றிய சோற்றைப் பழையது என்பார்கள். இந்தப் பழையதை விடியற்காலையில் சோற்றில் உள்ள நீரோடு சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும் என்றும், உடலில் ஒளி உண்டாகும் என்றும், மற்றும் வெறிநோய் முற்றிலும் நீங்கும் எனவும் கருதப்படுகிறது. பழைய சோற்றில் மோர் கலந்து சாப்பிட்டால் உடல் எரிச்சல், பித்தம், மனப்பிரமை முதலியவை நீங்குமென்றும், இரவில் நன்றாகத் தூக்கம் வருமென்றும் கூறப்படுகிறது. மிகுதியாக உண்டுவிட்டால், அப்பொழுதே உறக்கம் கண்களைத் தழுவும் என்பது குறிப்பிடத்தக்கது.

இலுப்பைப்பூ சம்பா (Iluppai poo samba) என்று அழைக்கப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். சம்பா பட்டத்திற்கு ஏற்ற மத்தியகால நெல் இரகமான இது, 130 - 140 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது.[1] வறட்சியைத் தாங்கி வளரும் திறனுடைய இந்த நெல் வகை, நெற்கதிர்கள் உரசும் போது மணம் வீசுக்கூடியதாக கூறப்படுகிறது.[2] உடல் வலியை போக்க முக்கிய பங்குவகிக்கும் இந்த இலுப்பைப்பூ சம்பா, அதிக மருத்துவகுணம் உடையதாக கருதப்படுகிறது

ஈர்க்குச்சம்பா (Irkkuccampa) என்று அழைக்கப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும்.[1] சம்பா வகைகளில், உடல் பித்தத்தை இந்த ஈர்க்குச்சம்பாவின் அரிசிச்சோறு, மிகவும் சுவையுடையதாக கருதப்படுகிறது

ஒட்டடையான் பாரம்பரிய நெல் இரகங்களில் ஒன்றான இது, காவிரியின் கழிமுக (டெல்டா) மாவட்டங்களில் மட்டுமல்லாது, தமிழகத்தில் மடுப் (சுனை) பகுதிகளில் இந்த நெல் சாகுபடி செய்யப்பட்டுவந்துள்ளது. 1940 களில் அறிமுகப்படுத்தப்பட்ட பசுமைப் புரட்சியின் காரணமாக இந்நெல் இரகம் உழவரைவிட்டு விலகியாதாகவும், தற்போது காவிரியின் கடைமடைப் பகுதியில் சில உழவர்கள் சாகுபடி செய்துவருவதாகவும் கருதப்படுகிறது. ஆடிப்பட்டத்தில் ( ஆடி மாதம்) விதைக்கப்படும் இவ்வகை நெல், மழை, வெள்ளம் வந்தாலும் தாங்கிக்கொண்டு ஆறடிவரை வளரக்கூடியது.

கருப்பு அரசி (Black rice), அல்லது கருஞ்சிவப்பு அரிசி) என்பது நெல் வகைத் தானியங்களில் ஒன்று. இவ்வரிசி அதிக ஊட்ட மதிப்பைக் கொண்டது.கருமையான அரிசி, ஆசியக் கண்டத்தில் பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது. பலவகைகளிலும் உணவாகப் பயன்படுகிறது. ஆய்வாளர்கள் இந்த கருமையான அரிசி புற்றுநோயினையும் இதயநோயினையும் கட்டுப்படுத்த உதவுவதாகக் கூறுகிறார்கள்.சீனாவில் விரும்பி உண்ணப்படும் இவ்வரிசியில் சக்கரையின் அளவு குறைவாக உள்ளது. நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஒரு கரண்டி அளவே உள்ள அரிசியில் எராளமான எதிர் ஆக்சிடன்று உள்ளதாகக் கூறுகிறார்கள். இந்த அரிசியின் தவிட்டினை வெகுவாக ஆய்ந்துள்ளனர். ஆந்திரசையனைன் என்கிற வேதிப்பொருள், அரிசிக்கு கருமை நிறத்தினைக் கொடுக்கிறது.

காட்டுப் பொன்னி பாரம்பரிய நெல் இரகங்களில் ஊடுபயிரிட சிறந்த இராகமான இது, மானாவாரி மற்றும் மேட்டுப் பகுதிகளில் தோப்பாக உள்ள தென்னை, வாழை, சப்போட்டாப் போன்ற சாகுபடி நிலங்களில் ஊடுபயிராகக் காட்டுப் பொன்னியைப் பயிரிடப்படுகிறது. காட்டுப் பொன்னியின் அரிசியில் நார்ச் சத்து (Crude fiber), புரதச் சத்து (Protein), மற்றும் கல்சியம் அதிகம் உள்ளதாகவும் எனவே, இதை உண்பதன் மூலம் பல்வேறு நோய்கள் குணமாகும் எனப்படுகிறது.

கிச்சலி சம்பா அல்லது கிச்சடி சம்பா (Kichedi samba) தற்பொழுது ஜி இ பி - 24 (GEB 24) தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் விரும்பி சாப்பிடுகிற இரகமாக உள்ளது.கிச்சலி சம்பா அரிசியைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாகவும். மேலும், இதன் சோற்றை சாப்பிட்டால் தேகச் செழுமையும், உடல் பலமும் உண்டாகும்.

குண்டுச்சம்பா (Gundu Samba) அல்லது, வட்டார வழமையில் மிளகி (Milagi)[1] எனப்படும் இந்த நெல் வகை, தமிழகத்தின் ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். குண்டு சம்பாவின் அரிசி உணவு சாப்பிடுவதால், நாவறட்சியைப் போக்கும். ஆனாலும் இதன் கரப்பான் எனும் பிணியை உண்டாக்குவதோடு, பசியை மந்திக்கச் செய்வதாகவும் கூறப்படுகிறது.

குதிரைவால் சம்பா (Kudhiraival Samba) எனப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் இரகமாகும். தமிழகத்தின் திருச்சி மாவட்டத்திலுள்ள செக்கணம் ஊராட்சிக்கு உட்பட்ட ‘கம்பளத்துப்பட்டி’ வட்டாரங்களில் அதிகளவில் பயிரிடப்படுவதாக கருதப்படும்.

குள்ளக்கார் (Kullakar) பண்டைக்கால நெல் வகைகளில் ஒன்றான இது, இந்தியாவில் பிரதானமாக பயரிடப்பட்டுள்ளது. பாரம்பரிய நெல்வகையைச் சார்ந்த இது, சுகாதார நலன்கள் நிறைந்த, பல்வேறு சிவப்பு நிற அரிசி இரகங்களில் ஒன்றாகும். குள்ளக்கார் எனும் இந்த இரகத்தில், உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள், துத்தநாகம், இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளதால் கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. செரிமானம் மெதுவாக நடப்பதால், பசி எடுப்பது தாமதமாகும். இதனால், உணவு எடுத்துக்கொள்ளும் அளவு தானாகவே குறையும். உடல் எடை குறைக்க நினைப்போர் இந்நெல்லின் அரிசிச்சோறு சாப்பிடுவதால், சாப்பிடும் அளவு குறைந்தும் அதேவேளை வயிறும் நிறைவதகாகக் கூறப்படுகிறது

வைகுண்டா (Vaigunda) எனப்படும் இவ்வகை நெல், ஒரு பாரம்பரிய நெல் இரகமாகும். தமிழகத்தின் நாகை மாவட்டத்திலுள்ள “கீவலுார்” வட்டாரங்களில் அதிகளவில் பயிரிடப்படுவதாக கருதப்படும் இது, வெள்ளப்பெருக்கு, நீர்த்தேக்கம் மற்றும் வறட்சி என அனைத்து சூழலையும் தாங்கும் ஆற்றல்களை கொண்டுள்ள நெற்பயிர் ஆகும்.

சம்பா என்பது தென்னிந்தியா மற்றும் இலங்கையில் விளைவிக்கப்படும் அரிசி வகைகளாகும். பாஸ்மதி அரிசி போல் நீளமாக இருக்காது. தென்னிந்தியாவில் பெரும்பாலும் காவிரி டெல்டா பகுதியில் பயிர் செய்யப்படுகிறது. ஆகஸ்டு மாதம் முதல் ஜனவரி மாதம் வரை சாகுபடியாகும்.

சிவப்பு சித்திரை கார் (Sivappu Chithiraikar)[ எனக்கூறும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பரமக்குடி பகுதியில் பிரதானமாக பயிரிடப்படும்.

சிவப்புக் கவுனி (Sivappu Kawni) தமிழக பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றான இது, தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்டது. தமிழகம் முழுவதும் உள்ள புன்செய், மற்றும் செம்மண் நிலப் பகுதிகளில் அதிக மகசூல் தரக்கூடிய இந்நெல் வகை, நேரடி விதைப்புக்கு ஏற்ற இந்த இரகமாகும். வறட்சி, மற்றும் வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களை தாங்கி வளரக்கூடிய இந்நெல் இரகம்.

சீரகச் சம்பா (Seeraga Samba) பாரம்பரிய நெல் இரகங்களில் ஒன்றாகும். சீரகம் எனும் சமையல் பொருளின் வடிவத்துக்கு ஒத்ததாக காணப்படுவதால், இந்த நெல்லுக்கு "சீரகச் சம்பா" எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்நெல்லின் அரிசி பிரியாணிகள் செய்ய ஏற்றது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பண்டைய நெல்வகைகளில், சீரகச்சம்பா தரத்திலும், விலையிலும் உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளது.சீரகச் சம்பா நறுமணமும், அறுசுவையும் நிறைந்தது. இது, எளிதாக செரிப்பதோடு, இரைப்பை ஒழுங்கீனங்களை தடுத்து பசியைத் தூண்டக்கூடியது.[4] ஆரம்ப நிலையிலுள்ள, வாத நோய்களைப் போக்கவல்லது.

புழுதிக்கார் ( Puzhuthikar)  பாரம்பரிய நெல் வகைகளின் வரிசையில் இடம்பெற்றுள்ள இது, மழை நீரை மட்டுமே நம்பியுள்ள புன்செய் நிலத்திற்கு ஏற்ற இரகமாகும். தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்திலுள்ள மேற்கு மலைத் தொடர் பிராந்தியங்களில் அமைந்துள்ள, மானாவாரி மற்றும் இறவை நிலப் பகுதிகளில் செழித்து வளரக்கூடியதாகும்.

பிச்சாவரை (Pichavari) எனப்படும் இவ்வகை நெல், ஒரு பாரம்பரிய நெல் இரகமாகும். தமிழகத்தின் நாகை மாவட்டத்திலுள்ள “வெள்ளப்பாலம்” மற்றும் “கீவலுார்” போன்ற வட்டாரங்களில் செழித்து வளரக் கூடிய இந்நெல் இரகம், வெள்ளப்பெருக்கு, மற்றும் வறட்சி என இருவேறு சூழலையும் தாங்கும் ஆற்றல்களை கொண்டுள்ள தாளடிப் பயிராகும். 

மரநெல் எனப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் இரகமாகும். தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டையின் வட்டாரங்களில் அதிகளவில் பயிரிடப்படுவதாக கருதப்படும் இது, 120 - 125 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாகும். சிவப்பு நிறத்திலுள்ள இந்த நெல்லின் அரிசி, பெரு நயத்துடன் (தடித்து) உள்ளது. மேலும், இம்மர நெல்லின் தானிய நெல்மணிகளின் விதையுறை கடினத்தன்மையுடன் காணப்படுவதால், முதிர்வடைந்த அறுவடை காலத்தில் தொடர்மழையால் எளிதில் முளைத்து விடுவதில்லை எனக் கூறப்படுகிறது.

மாப்பிள்ளைச் சம்பா ஒரு பாரம்பரிய இரக அரிசியாகும். நம் முன்னோர்கள் பயன்படுத்திய, பயிரிட்ட நாட்டுரக அரிசிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மருத்துவ குணமுறையது. இதில் “மாப்பிளைச் சம்பா” ஆண்மைத் தன்மையை அதிகரிக்கும். குழந்தைப் பேறில்லாதவர்கள் இந்த அரிசியை தினமும் உண்டு வந்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவார்கள்.

மிளகு சம்பா பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றான இது, சற்றே வித்தியாசமான உருண்டை வடிவத்தில் காணப்படும் நெல் வகையாகும். பார்ப்பதற்கு மிளகுபோல இருப்பதால், மிளகு சம்பா என அழைக்கப்படும் இவ்வகை, வெண்ணிறமான சன்ன இரக அரிசியைக் கொண்டது. பண்டையக் காலத்தில் மற்போர் வீரர்கள் இதை உண்டு வலிமை பெற்றுள்ளதாக கருதப்படும் மிளகு சம்பா நெல்லின் அரிசி, அதிக மருத்துவக் குணம் கொண்டது அறியப்படுகிறது. இந்த நெல்லின் அரிசியில் வடித்த கஞ்சி, பசியைத் தூண்டவும், மற்றும் தலைவலியைப் போக்கும் தன்மையை கொண்டது. வாதம் போன்ற பலவிதமான நோயைப் போக்கி உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது.

முருங்கைக் கார் (Murungaikar) இவ்வாறாக அழைக்கப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டப் பகுதிகளில் பிரதானமாக பயிரிடப்படும்.மிகக் குறைவான மழைப்பொழிவுக் காலங்களுக்கு ஏற்ற இந்நெல் இரகத்தை, பொதுவாக ஆகத்து மாதம் தொடங்கும் பின் சம்பா பருவத்தில் (ஆவணியில்) விதைத்து, சனவரியில் (மார்கழியில்) அறுவடைச் செய்யபடுகிறது.

வால் சிவப்பு (Val Sivappu) பாரம்பரிய நெல் வகையாக உள்ள இது, தமிழகத்தின் நாகை மாவட்டத்திலுள்ள “வெள்ளப்பாலம்” மற்றும் “கீவலுார்” போன்றப் பகுதிகளில் நன்கு வளரக் கூடிய நெல் இரகமாகும். 145 - 150 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், சுமார் 160 சென்டிமீட்டர் உயரம் வரையில் வளரக் கூடியதாகும். வால் சிவப்பு நெல்மணி சிவப்பு நிறமுடனும், சிறந்த சுவையுடனும் விளங்குகிறது.

வாடன் சம்பா (Vadan Samba) பாரம்பரிய நெல் வகைகளில் இளம் குழந்தைக்கு முதல் உணவாக (இதன் அரிசிக் கஞ்சி) வழங்கப்படும் இது, மானாவாரி மற்றும் வறட்சியான பகுதிகளில் பரவலாகச் சாகுபடி செய்யப்படும் நெல் இரகமாகும். வறட்சியைத் தாங்கி, மழை பெய்யும்போது பயிர் வளர்ச்சி அடையும் தன்மை கொண்ட வாடன் சம்பா, சுமார் நான்கடி வரையிலும் வளரக்கூடிய நெல் வகையாகும். நூற்று நாற்பது நாள் வயதுடைய நீண்ட காலப் பயிரான இந்நெல் இரகம், மஞ்சள் மற்றும் பழுப்பு நிறத்துடன் கூடிய சன்ன இரக அரிசியைக் கொண்டது.அதீதமான மருத்துவக் குணமும் கொண்ட வாடன் சம்பா, மஞ்சள் காமாலை போன்ற நோய்களுக்கு மூலிகை வைத்தியம் எடுத்துக்கொள்பவர்கள் பத்தியம் (உணவு கட்டுப்பாடு) இருக்க வேண்டும். மேலும், பேதிக்கு மருந்து சாப்பிடுபவர்களுக்கும் வாடன் சம்பா அரிசிக் கஞ்சி வைத்துக் கொடுக்கும் பழக்கம் கிராமப் பகுதிகளில் இன்றும் இருந்துவது 

வெள்ளை குறுவை கார் (Vellai Kuruvi Kar) பாரம்பரிய நெல் பட்டியலில் இடம்பிடித்துள்ள இவ்வகை நெல் தமிழகத்தின் நாகை மாவட்டத்திலுள்ள “வெள்ளப்பாலம்” மற்றும் “கீவலுார்” போன்றப் வட்டாரங்களில் நன்கு வளரக் கூடிய நெல் இரகமாகும். 25 - 30 நாட்கள் (நாற்றங்கால்) நாற்று வளர்ப்பு உட்பட, 125 - 135 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், சுமார் 100 - 120 சென்டிமீட்டர் உயரம் வரையில் வளரக் கூடியதாகும். வெள்ளை குறுவை காரின் தானிய மணிகள், மற்றும் வைக்கோல் ஆகியவை வெளிறிய மஞ்சள் நிறத்திலிருந்து, அழுக்கான வெள்ளை நிறமாகத் தோற்றமளிப்பதாக உள்ளது. மேட்டுப்பாங்கான நிலப்பகுதியில் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய இந்த நெல் இரகம், நேரடி விதைப்பு முறைக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது.

வெள்ளைப்பொன்னி பண்டைய, மற்றும் பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றாகும். இது, தமிழ்நாட்டின் விவசாயிகள் மத்தியில் பிரபலமாக உள்ள நெல் இரகமாகும். ‘வெள்ளைப்பொன்னி’ என்றழைக்கப்படும் இந்த நெல் வகை, நெடுங்காலத்திற்கு முன்பு, விவசாயிகளால் பல்வேறு பொன்னி நெல்லிலிருந்து பிரித்தறிந்து உருவாக்கப்பட்டவையாகும்.

Source 
wikipedia.org

No comments:

Post a Comment

Adbox