"

Saturday, March 9, 2019

வரலாற்றில் இன்று மார்ச் 9 நடைபெற்ற வரலாற்று சுவடுகள்

வரலாற்றில் இன்று மார்ச் 9 உலகில் நடைபெற்ற சம்பவங்கள், முக்கிய தினங்கள், தலைவர்களின் பிறந்த நாள், அவர்களின் நினைவு நாள் மற்றும் முக்கிய வரலாற்று சுவடுகள் ஒரு தொகுப்பாக.

நிகழ்வுகள்
1847 – ஐக்கிய அமெரிக்காவின் படைகள் ஜெனரல் வின்ஃபீல்ட் ஸ்கொட் தலைமையில் மெக்சிக்கோவைத் தாக்கினர்.
1919- எகிப்தில் 1919 புரட்சி வெடித்தது.
1923 – விளாடிமிர் லெனினுக்கு மூன்றாம் தடவையாக மாரடைப்பு ஏற்பட்டது.
1945 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க பி-29 போர் விமானங்கள் டோக்கியோவில் குண்டுகளை வீசியதில் ஏற்பட்ட தீச்சூறாவளியினால் 100,000 பேர் கொல்லப்பட்டனர்.


1956 – ஜோர்ஜியாவில் இடம்பெற்ற மாபெரும் மக்கள் எதிர்ப்புப் போராட்டம் சோவியத் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது.
1957 – அலாஸ்காவில் அண்ட்றியானொவ் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலத்த சேதமும் ஆழிப் பேரலையும் ஏற்பட்டது.
1959 – பார்பி பொம்மை முதன் முதலாக விற்பனைக்கு வந்தது.
1967 – ஜோசப் ஸ்டாலினின் மகள் சிவெட்லானா அலிலுயேவா ஐக்கிய அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்றார்.
1976 – இத்தாலியின் டிறெண்டோ என்ற இடத்தில் ஆகாயத்தில் நகர்ந்து கொண்டிருந்த கேபிள் வாகனம் கீழே விழுந்து 15 பிள்ளைகள் உட்பட 42 பேர் கொல்லப்பட்டார்கள்.
1986 – சலேஞ்சர் விண்ணோடத்தின் அழிந்த சிதைவுகளை ஐக்கிய அமெரிக்காவின் ஆழ்கடலோடிகள் கண்டுபிடித்தனர். இறந்த ஏழு விண்வெளி வீரர்களினதும் உடல்கள் உள்ளே இருந்தன.


2006 – சனியின் துணைக்கோளான என்செலாடசில் திரவ நிலையில் நீர் கண்டுபிடிக்கப்பட்டது.
பிறப்புக்கள்
1923 – வால்ட்டர் கோன், நோபல் பரிசு பெற்றவர்.
1934 – யூரி ககாரின், விண்வெளி சென்ற முதலாவது மனிதர் (இ. 1968)
1943 – பாபி ஃபிஷர், அமெரிக்க சதுரங்க மேதை (இ. 2008)
1954 – பொபி சாண்ட்ஸ், ஐரிஷ் குடியரசு இராணுவத்தைச் சேர்ந்த தன்னார்வலர் (இ. 1981)
இறப்புக்கள்
1974 – ஏர்ல் சதர்லாண்ட், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1915)
1983 – ஊல்ஃப்வொன் இயூலர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1905)
1992 – மெனாச்சிம் பெகின், இசுரேலியப் பிரதமர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1913)


1997 – நொடோரியஸ் பி.ஐ.ஜி., ராப் இசைக் கலைஞர் (பி. 1972)

No comments:

Post a Comment

Adbox