"

Sunday, March 31, 2019

வரலாற்றில் இன்று மார்ச் 31 நடைபெற்ற வரலாற்று சுவடுகள்


வரலாற்றில் இன்று மார்ச் 31 உலகில் நடைபெற்ற சம்பவங்கள், முக்கிய தினங்கள், தலைவர்களின் பிறந்த நாள், அவர்களின் நினைவு நாள் மற்றும் முக்கிய வரலாற்று சுவடுகள் ஒரு தொகுப்பாக.

நிகழ்வுகள்
1492 – ஸ்பெயினில் இருந்து அனைத்து 150,000 யூதர்களும் ரோமன் கத்தோலிக்கராக மாற வேண்டும் அல்லது அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்ற உத்தரவை இசபெல்லா மாகாராணி பிறப்பித்தார்.
1866 – சிலியின் வல்பரைசோ துறைமுகம் ஸ்பானிய கடற்படையின் குண்டுத் தாக்குதலுக்குள்ளானது.
1885 – இலங்கையில் தமிழ், சிங்கள, இஸ்லாமிய வருடப் பிறப்பு நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டது.


1889 – ஈபெல் கோபுரம் தொடக்க விழா கொண்டாடப்பட்டது.
1909 – பொசுனியா எர்செகோவினா மீதான ஆஸ்திரியாவின் கட்டுப்பாட்டை சேர்பியா ஏற்றுக் கொண்டது.
1917 – ஐக்கிய அமெரிக்கா டானிஷ் மேற்கிந்தியத் தீவுகளை டென்மார்க்கிடம் இருந்து $25 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்குக் கொள்வனவு செய்து அமெரிக்க கன்னித் தீவுகள் எனப் பெயர் மாற்றியது.
1918 – ஐக்கிய அமெரிக்காவில் பகலொளி சேமிப்பு நேரம் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
1931 – நிக்கரகுவாவின் தலைநகரமான மனாகுவாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 2,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1942 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியர்கள் கிறிஸ்துமஸ் தீவை பிரித்தானியாவிடம் இருந்து கைப்பற்றியது.
1951 – யூனிவாக் 1 என்ற முதலாவது ஐக்கிய அமெரிக்காவின் வர்த்தகக் கணினி அந்நாட்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நிறுவனத்துக்கு தரப்பட்டது.
1959 – திபெத்தின் 14வது தலாய் லாமா, டென்சின் கியாட்சோ, எல்லையைக் கடந்து இந்தியாவினுள் நுழைந்து அரசியல் தஞ்சம் கோரினார்.
1966 – சோவியத்தின் லூனா 10 விண்கலம் சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. இதுவே சந்திரனின் சுற்றுவட்டத்தை வலம் வந்த முதலாவது விண்கலமாகும்.
1970 – 12 ஆண்டுகள் விண்வெளியில் இருந்து விட்டு எக்ஸ்புளோரர் 1 புவியின் வளிமண்டலத்துள் வந்தது.
1979 – கடைசி பிரித்தானியப் படையினர் மோல்ட்டாவை விட்டு விலகினர். மோல்ட்டா விடுதலையை அறிவித்தது.
1990 – இந்திய அமைதிப் படை ஈழத்தில் இருந்து முற்றாக விலக்கப்பட்டது.


2004 – கூகிள் 1 ஜிகா பைட் கொள்ளளவுள்ளதான ஜிமெயிலை அறிவித்தது.
2007 – முதலாவது புவி மணி நிகழ்வு சிட்னியில் இடம்பெற்றது.
பிறப்புக்கள்
1596 – ரேனே டெஸ்கார்ட்டஸ், தத்துவ ஞானி, கணித மேதை (இ. 1650)
1732 – ஜோசப் ஹேடன், மேற்கத்திய இசையறிஞர் (இ. 1809)
1890 – வில்லியம் பிராக், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயர் (இ. 1971)
1898-சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம், இலங்கைத் தமிழரசுக் கட்சியை ஆரம்பித்தவர் (இ. 1977)
1906 – Sin-Itiro Tomonaga, நோபல் பரிசு பெற்ற ஜப்பானியர் (இ. 1979)
1914 – ஒக்டாவியோ பாஸ், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் (இ. 1998)
1928 – இராம.அரங்கண்ணல், தமிழக எழுத்தாளர், திரைப்படதயாரிப்பாளர்
1934 – கார்லோ ரூபியா, நோபல் பரிசு பெற்ற இத்தாலியர்
இறப்புக்கள்
1727 (ஜோர்ஜியன் நாட்காட்டியில்) – ஐசாக் நியூட்டன், அறிவியலாளர் (பி. 1643)
1861 – ஹென்றி மார்ட்டின், ஈழத்தின் தமிழ் எழுத்தாளர், ஓவியர், மதப் பிரசாரகர்.


1917 – எமில் பேஹ்ரிங், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (பி. 1854)
1945 – ஹான்ஸ் ஃபீஷர், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (பி. 1881)
2001 – கிளீஃபோர்ட் ஷல், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1915)
சிறப்பு நாள்
மால்ட்டா – விடுதலை நாள் (1979).

No comments:

Post a Comment

Adbox