"

Sunday, March 31, 2019

உலகில் முதல் 5ஜி சேவை சீனாவில் தொடங்கப்பட்டு உள்ளது, இந்த 5ஜி சேவையால் உயிரினங்களுக்கு ஏதேனும் பாதிப்பு வருமா...?

"world first 5 G Network in China 'shanghai' town"


சீனாவின் ஷாங்காய் நகரம் உலகிலேயே முதன் முதலில் 5ஜி நெட்வொர்க் சேவையை பெறும் நகரம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

இன்று உலகில் உள்ள பல்வேறு நாடுகள் 5ஜி சேவையை வழங்க முனைப்புடன் செயல்பட்டு கொண்டு இருக்கிறது. 5ஜி சேவை குறித்து பல்வேறு சச்சரவுகள் இருந்த போதிலும் பெரும்பாலான நாடுகள் அதை துவங்குவதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகிறது.  5 ஜி அலைவரிசையில் உள்ள மைக்ரோவேவ்  மனித உடலுக்கு தீங்கானது புவியின் வெப்ப தன்மையை அதிகரிக்கும் என பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

எந்திரன் 2 தமிழ் படத்திலும் செல்பேசிகளில் இருந்து வெளியேறக்கூடிய கதிர்வீச்சால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து தகவல்கள் படத்தில் வெளிவந்து இருப்பதை நாம் பார்த்திருப்போம்.  இந்நிலையில் சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் 5ஜி சேவையானது முதல் முதலாக செயல்பட துவங்கியுள்ளது.இதன்மூலம் உலகிலேயே 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முதல் நகரம் எனும் பெருமையை பெற்றுள்ளது. சீனாவில் 5ஜி நெட்வொர்க் சோதனை, ஷாங்காயின் ஹாங்கௌவில் துவங்கப்பட்டுள்ளது.இதே பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக 5ஜி Space Station-களை உருவாக்கும் பணிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

சேவையை துவங்கி வைத்த ஷாங்காய் மாவட்ட துணை மேயர் வு கிங், 5ஜி சேவையில் முதல் வீடியோ கால் மேற்கொண்டார். இதற்கு அவர் ஹூவாய் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனை பயன்படுத்தினார். சீனாவின் பல்வேறு பகுதிகளில் 5ஜி சேவை மையங்கள் சீனாவின் பல்வேறு பகுதிகளில் Install செய்யப்பட்டு வருகின்றன.

உலக நாடுகளிடையே அடுத்த தலைமுறை செல்லுலார் மற்றும் மொபைல் நெட்வொர்க் சேவையை உருவாக்குவதில் கடும் போட்டி நிலவுகிறது. 5ஜி தான் அடுத்த தலைமுறை தொழில்நுட்பமாக இருக்கிறது.  இந்த தொழில்நுட்பத்தின் மூலம் தரவிறக்கம் செய்யும் வேகம் 10 முதல் 100 மடங்குவரை அதிகமாக இருக்கும். இந்தியாவிலும் பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வங்கி சேவையை வழங்குவதற்கு முனைப்புடன் செயல்பட துவங்கியுள்ளன மிக விரைவில் இந்தியாவிலும் 5ஜி சேவையை எதிர்பார்க்கலாம். இந்தப் 5ஜி சேவையானது முழுமையாக வழங்கும் பட்சத்தில் மட்டுமே  5ஜி தொழில்நுட்பதால்  பூமியில் வாழும் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என அறிய இயலும்.

No comments:

Post a Comment

Adbox