"

Saturday, March 30, 2019

இனி வாட்ஸ் அப் பயனாளிகள் விரும்பிய மொழியில் what's appஐ இயக்குவது கொள்வது எப்படி...?


வாட்ஸ் அப் செயலியை தமிழ் மொழியில் இயக்குவது எப்படி என்பதை காண்போம்.


வாட்ஸ் ஆப் what's app குறுஞ்செய்தி செயலியை இன்று உலகளவில் 200 மில்லியனிற்கும் அதிகமான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மிகவும் பிரபல்யமான வாட்ஸ் அப் செயலியில் புதுப்புது அப்டேட்டுகள் வந்த வண்ணம் உள்ளது.

தற்சமயம்  இச்செயலியினை பயனர் விரும்பும் மொழியில் பயன்படுத்திக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.  இந்தியாவில் 10 உள்நாட்டு மொழிகளில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ், ஹிந்தி, பெங்காலி, பஞ்சாபி, தெலுங்கு, மராத்தி, உருது, குஜராத்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என்பன அடங்கும். இந்த வசதியினை செயற்படுத்துவதற்கு முதலில் வாட்ஸ் ஆப்பினை இயக்க வேண்டும். அதன் பின்னர் மெனு பொத்தானை கிளிக் செய்து செட்டிங்ஸ் பகுதிக்கு செல்ல வேண்டும்.பின்னர் Chat and Open App Language என்பதை கிளிக் செய்து விரும்பிய மொழியினை தெரிவு செய்ய வேண்டும். எனினும் கைப்பேசிகளின் சிறப்பம்சங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த வசதிகள் கிடைக்கப்பெறும்.

   
What's app



      

No comments:

Post a Comment

Adbox