"

Sunday, March 3, 2019

பல்வேறு வியாதிகளுக்கு ஓர் அரிய பொக்கிஷம் பிரண்டை





பிரண்டை ஓர் அரிய மருத்துவ குணம் கொண்ட தாவரம் இதன் தண்டு வேர் பழம் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது.பிரண்டை உடலைத் தேற்றும்; பசியைத் தூண்டும்; பொதுவாக வயிறு சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது என செரிமான சக்தி அஜீரண கோளாறு சரி செய்யக் கூடியது. எலும்பு முறிவின் போது அரைத்து அதை கட்டினால் எலும்பு முறிவு குணமாகும்.

பிரண்டை ஆனது இரத்தக் குழாய்களில் படிந்துள்ள கொழுப்பு  நீக்கும் சக்தியை கொண்டுள்ளது.


அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்ளும் பொழுது பற்களில் ஏற்படும் வீக்கம் வலி ஆகியவற்றை சரி செய்யக் கூடிய தன்மையைப் பெற்றுள்ளது.மேலும் ஞாபக சக்தியை தரக்கூடியது மற்றும் நரம்புக்கு பலம் தரக்கூடியது.

இந்த பிரண்டை மேலும் உடலில் தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டுள்ளது. மாதவிலக்கைத் தூண்டும்பிரண்டையில் இருந்து சாறு எடுத்து 6 தேக்கரண்டி அளவு சாற்றுடன் ஒரு தேக்கரண்டி

நல்லெண்ணெய் கலந்து காலையில் மட்டும் ஒரு வாரம் சாப்பிட்டு வர மாதவிடாய் ஒழுங்காக வரும்.
  அஜீரணம் ஆகியவற்றைக் குணமாக்கும்.  எனவே வாரம் ஒரு முறை பிரண்டை துவையல் பயன்படுத்தி வந்தால் உடலில் பல்வேறு நிவாரணம் தரக் கூடிய ஒரு பொருளாக இது பயன்படும்.




பிரண்டை மேல் தோலைச் சீவி துண்டுகளா நெய்யில் வதக்கி தேவையான அளவு புளி, உப்பு, காரம் சேர்த்து  பின்பு கடுகு, உளுந்து சேர்த்து தாளித்து துவையல் செய்து சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு செய்து வர இரத்த மூலம் குணமாகும்.


No comments:

Post a Comment

Adbox