"

Sunday, March 3, 2019

வரலாற்றில் இன்று மார்ச் 3 நடைபெற்ற வரலாற்று சுவடுகள்


வரலாற்றில் இன்று மார்ச் 3 உலகில் நடைபெற்ற சம்பவங்கள், முக்கிய தினங்கள், தலைவர்களின் பிறந்த நாள், அவர்களின் நினைவு நாள் மற்றும் முக்கிய வரலாற்று சுவடுகள் ஒரு தொகுப்பாக.


நிகழ்வுகள்
1575 – இந்தியாவின் முகலாயப் பேரரசர் அக்பர் வங்காளப் படைகளைத் தோற்கடித்தார்.
1833 – அகிலத்திரட்டு அம்மானையின்படி, நாராயணனின் அவதாரமாக அய்யா வைகுண்டர் திருச்செந்தூரில் பிறந்தார்.
1857 – பிரான்சும் ஐக்கிய

இராச்சியமும் சீனா மீது போரை அறிவித்தன.
1878 – ஓட்டோமான் பேரரசின் கீழ் பல்கேரியா விடுதலை அடைந்தது.
1905 – ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட சபையை (டூமா)வை ஏற்படுத்த இணங்கினான்.
1918 – முதலாம் உலகப் போரில் ரஷ்யாவின் பங்களிப்பை முடிவுக்குக் கொண்டுவர ஜேர்மனி, ஆஸ்திரியா மற்றும் ரஷ்யா ஆகியன உடன்பாட்டிற்கு வந்தன.
1923 – டைம் இதழின் முதல் பதிப்பு வெளியிடப்பட்டது.
1933 – ஜப்பானில் ஹொன்ஷூ என்ற இடத்தில் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 3,000 பேர் வரையில் இறந்தார்கள்.
1938 – சவுதி அரேபியாவில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது.
1939 – மும்பாயில் மகாத்மா காந்தி ஆதிக்கவாதிகளுக்கு எதிராக உண்ணாநோன்பை ஆரம்பித்தார்.
1942 – இரண்டாம் உலகப் போர்: மேற்கு ஆஸ்திரேலியாவில் புரூம் என்ற நகரில் ஜப்பானின் பத்து போர் விமானங்கள்

குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டதில் 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனார்.
1943 – இரண்டாம் உலகப் போர்: லண்டனில் விமானக் குண்டுத்தாக்குதலின் போது சுரங்கத் தொடருந்து நிலையத்தில் ஒதுங்கிய 173 பேர் நெரிசலில் சிக்கி இறந்தனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: முன்னர் நடுநிலையாக இருந்த பின்லாந்து அச்சு நாடுகளுக்கெதிராக போரை அறிவித்தது.
1966 – பிரித்தானிய போயிங் 707 பயணிகள் விமானம் ஒன்று ஃபியூஜி மலையில் விபத்துக்குள்ளானதில் 124 பேர் கொல்லப்பட்டனர்.
1969 – நாசாவின் அப்பலோ 9 விண்ணில் ஏவப்பட்டது.
1971 – இந்தோ-பாகிஸ்தான் போர் ஆரம்பமானது.
1974 – பாரிஸ் அருகில் துருக்கிய விமானம் ஒன்று வீழ்ந்து மோதியதில் அதில்

பயணம் செய்த அனைத்து 346 பேரும் கொல்லப்பட்டனர்.
1974 – லூத்தரன் சபைகளுல் சில கத்தோலிக்க திருச்சபையில் இணைந்தன.
1991 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து செல்ல ஆதரவாக லாத்வியாவின் 74% மக்களும் எஸ்தோனியாவின் 83% மக்களும் வாக்களித்தனர்.
1992 – பொஸ்னியா என்ற நாடு உருவாக்கப்பட்டது.
2002 – சுவிட்சர்லாந்து ஐநாவில் இணைவதற்கு ஆதரவாக சுவிட்சர்லாந்தில் மக்கள் வாக்களித்தனர்.

பிறப்புகள்
1839 – ஜாம்ஷெட்ஜி டாடா, இந்தியத் தொழிலதிபர் (இ. 1904)
1845 – கியார்கு கேன்ட்டர், கணிதவியலர் (இ. 1918)
1847 – அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல், கண்டுபிடிப்பாளர் (இ. 1922)
  1935 – அன்புமணி,

ஈழத்து எழுத்தாளர் (இ. 2014)
1941 – பங்காரு அடிகளார் இந்திய ஆன்மீக குரு
1950 – திக்குவல்லை கமால், ஈழத்து எழுத்தாளர்.
1955 – கணபதி கணேசன், தமிழ் இதழியலாளர் (இ. 2002)
1970 – இன்சமாம் உல் ஹக், பாகிஸ்தான் துடுப்பாட்டக்காரர்

இறப்புக்கள்
1703 – ராபர்ட் ஹூக், ஆங்கிலேய அறிவியலாளர் (பி. 1635)
1707 – ஔரங்கசீப், மொகாலயப் பேரரசர் (பி. 1618)
1996 – சி. சிவஞானசுந்தரம், சிரித்திரன் ஆசிரியர்.
1999 – ஜேராட் ஹேர்ஸ்பேர்க், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1904)

சிறப்பு நாள்
பல்கேரியா – விடுதலை நாள் (1878)

No comments:

Post a Comment

Adbox