"

Friday, March 29, 2019

வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு முத்து போன்ற வெண்மை நிற பற்களை பெறுவது எப்படி...?

teeth whitening tips

நாம் சிரிக்கும் போது நம்முடைய அழகைத் வெளிப்படுத்துவது நம்முடைய பற்களில் உள்ள வெண்மை நிறம் தான்.நாம் சரியாக பல் துலக்கினால் கூட பற்களில் இருக்கும் மஞ்சள் கரை போகவே போகாது. 

ஆனால்  இயற்கையான முறையில் ஒருசில வீட்டுப் பொருட்களைப் பயன்படுத்தி, பற்களை துலக்கினாலும், பற்களை நன்கு ஆரோக்கியமாகவும், பளிச்சென்று வெண்மையுடனும் இருக்கும். ஒரு பௌலில் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின் டூத் பிரஸ் கொண்டு இந்த கலவையை பற்களில் தடவி 1-2 நிமிடம் கழித்து, வாயை நீரால் கழுவ வேண்டும். இப்படி 10 நாளைக்கு ஒருமுறை செய்து வந்தால், பற்களில் உள்ள அசிங்கமான மஞ்சள் கறைகள் நீங்கி, பற்கள் எப்போதும் வெள்ளையாக இருக்கும். 

வாழைப்பழத் தோலில் உள்ள பேஸ்ட் பற்களில் படரும் வரை பற்களில் மேலும் கீழும் நன்றாக தேய்க்க வேண்டும். பின் 10 நிமிடங்கள் கழித்து டூத் பிரஷால் பேஸ்ட் பயன்படுத்தி சுத்தம் செய்து வாயை கழுவினால் உடனடி மாற்றத்தை காணலாம்.ஆரஞ்சு பழத்தின் தோல் அல்லது அதன் கூழை வைத்து பற்களை தேய்த்தால், பற்கள் மின்னுவதோடு, வாய் துர்நாற்றமின்றியும் இருக்கும்.

ஆரஞ்சு தோல் பற்களுக்கு மிகவும் நல்லது. 

தினமும் பற்களை சுத்தம் செய்வதற்கு முன் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெயால் வாயை கொப்பளிக்க வேண்டும். இதனால் வாய் மற்றும் பற்கள் சுத்தமாகும். 1/2 டீஸ்பூன் ஆப்பபிள் சீடர் வினிகரை 1 கப் நீருடன் கலந்து கொள்ள வேண்டும்.  பின் பற்களைத் துலக்கும் முன் இந்த நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.  இப்படி ஒரு வாரத்திற்கு 2-3 முறை காலை வேளையில் செய்ய வேண்டும். ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள அமிலம், பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கி, பற்களை வெண்மையாக்கும். 

1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன்,

1/2 டீஸ்பூன் உப்பை சேர்த்து ஒரு கப்பில் கலந்துக் கொள்ள வேண்டும். பின் டூத்பிரஷை தண்ணீரில் நனைத்துக் கொண்டு பற்களில் மெல்ல தேய்த்து, துப்ப வேண்டும். இதை தொடர்ந்து ஐந்து முறை செய்து வந்தால், பற்களில் உள்ள மஞ்சள் கரைகள் நீங்கி வெண்மையாக பளிச்சிடும்.

No comments:

Post a Comment

Adbox