"

Monday, March 4, 2019

வரலாற்றில் இன்று மார்ச் 4 நடைபெற்ற வரலாற்று சுவடுகள்



வரலாற்றில் இன்று மார்ச் 4 உலகில் நடைபெற்ற சம்பவங்கள், முக்கிய தினங்கள், தலைவர்களின் பிறந்த நாள், அவர்களின் நினைவு நாள் மற்றும் முக்கிய வரலாற்று சுவடுகள் ஒரு தொகுப்பாக.


நிகழ்வுகள்
1275 – சீன வானியலாளர்கள் முழுமையான சூரிய கிரகணத்தை அவதானித்தனர்.

1351 – சியாமின் மன்னராக ராமாதிபோதி முடி சூடினார்.
1493 – கடலோடி கொலம்பஸ் அமெரிக்காவுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு லிஸ்பன் திரும்பினார்.
1519 – ஹேர்னான் சோர்ட்டேஸ் மெக்சிகோவில் தரையிறங்கினான்.

1665 – இங்கிலாந்து மன்னன் இரண்டாம் சார்ல்ஸ் நெதர்லாந்து மீது போரை அறிவித்தான்.
1793 – பிரெஞ்சுப் படைகள் நெதர்லாந்தின் கீர்ட்ரூடென்பேர்க் நகரைக் கைப்பற்றினர்.
1810 – பிரெஞ்சு இராணுவம் போர்த்துக்கல்லில் இருந்து விரட்டப்பட்டது.
1813 – நெப்போலியனுடன் போரிட்ட ரஷ்யப் படைகள் ஜேர்மனியின் பேர்லின் நகரை அடைந்தனர். பிரெஞ்சுப் படைகள் எதிர்ப்பேதும் இன்றி நகரை விட்டு வெளியேறினர்.
1877 – எமிலி பேர்லீனர் மைக்ரோபோனைக் கண்டுபிடித்தார்.
1877 – பியோத்தர் சாய்க்கொவ்ஸ்கியின் ஸுபான் லேக் பலே நடனம் மாஸ்கோவில் முதற் தடவையாக மேடையேறியது.
1882 – பிரித்தானியாவின் முதலாவது மின்சார டிராம் வண்டி கிழக்கு லண்டனில் ஓடவிடப்பட்டது.
1894 – ஷங்காயில் ஏற்பட்ட பெரும் தீயில் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் எரிந்து சாம்பலாயின.
1899 – குயீன்ஸ்லாந்தில் இடம்பெற்ற பெரும் சூறாவளியினால் 300 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1908 – ஒகைய்யோவில் பாடசாலை ஒன்று தீப்பற்றியதில் 174 பேர் கொல்லப்பட்டனர்.
1917 – ரஷ்யாவில் பெப்ரவரி புரட்சி வெற்றி பெற்றது.
1931 – இந்தியாவில் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் மக்களின் அடிமட்டத்தினர் அனைவரும் உப்பை கட்டுப்பாடு ஏதுமின்றி பயன்படுத்தவும் பிரித்தானியவின் ஆளுநர் எட்வர்ட் வூட் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
1945 – இரண்டாம் உலகப் போர்: பின்லாந்து நாசி ஜெர்மனி மீது போரைத் தொடுத்தது.
1945 – எலிசபெத் இளவரசி (பின்னர் மகாராணியானவர்) இராணுவத்தில் வாகன செலுத்துனராக இணைந்தார்.
1959 – ஐக்கிய அமெரிக்காவின் பயனியர் 4 உலகின் இரண்டாவது (அமெரிக்காவின் முதலாவது) செயற்கைக் கோள் ஆனது.

1977 – ருமேனியா தலைநகர் புகாறெஸ்ட்டில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1,570 பேர் கொல்லப்பட்டனர்.
1980 – றொபேட் முகாபே சிம்பாப்வேயின் முதலாவது கருப்பின பிரதமரானார்.
1994 – கொலம்பியா 16 விண்ணோடம் ஏவப்பட்டது.
2001 – லண்டனில் பிபிசி தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்னால் இடம்பெற்ற பெரும் குண்டுவெடிப்பினால் 11 பேர் காயமடைந்தனர்.
2001 – போர்த்துக்கலில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 70 பேர் கொல்லப்பட்டனர்.
2006 – பயனியர் 10 விண்கலத்துடன் மேற்கொள்ளப்பட்ட கடைசித் தொடர்பு தோல்வியில் முடிந்தது.
2006 – அசாம் மாநிலத்தின் பெயர் அசோம் என மாற்றப்பட்டது.


பிறப்புக்கள்
  1938 – அன்ரன் பாலசிங்கம்,

விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியர் (இ. 2006)
1947 – தெ. நித்தியகீர்த்தி, ஈழத்து, ஆஸ்திரேலிய எழுத்தாளர் (இ. 2009)
  1970 – ச.நித்தியானந்தன் – கவிஞர், ஈழத்து எழுத்தாளர்

இறப்புக்கள்
1193 – சலாடீன், துருக்கிய சுல்தான் (பி. 1137)

1941 – லூட்விக் குயிட், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1858)
1952 – சார்ள்ஸ் ஷெரிங்டன், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1857)
2005 – கலைச்செல்வன், உயிர்நிழல் ஆசிரியர்

No comments:

Post a Comment

Adbox