வாய் துர்நாற்றத்திற்கு மிக முக்கியமான காரணம் வயிற்றின் இரைப்பையில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் வாயில் துர்நாற்றம் ஏற்படுவதற்கு காரணமாகிறது.
வாயினுள் புண் மற்றும் பல் சொத்தை போன்றவை வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் பரபரப்பாக இயங்கும் வாழ்க்கைச் சூழலின் காரணமாக காலை கடன்களை சரிவர செய்யாத காரணத்தினாலும் இத்தகைய பாதிப்பு ஏற்படும். இந்த வாய் துர்நாற்றமானது ஒரு மனிதனின் நம்பிக்கையை இறப்பதற்கு காரணமாக அமைந்தது விடுகிறது. ஏனெனில் பிறரிடம் பேசும் பொழுது அத்தகைய பிரச்சனை இருந்தால் அவர்களால் தைரியமாக மற்றவர்களிடம் பேசுவது இல்லை. இது சில நேரங்களில் நம்முடைய நம்பிக்கை இழப்பதற்குக் காரணமாகவும் அமைந்து விடுகிறது.
இந்த பாதிப்பினை போக்குவதற்கு கீழ்காணும் முறைகளில் ஏதேனும் ஒன்றை பின்பற்றினால் போதுமானது.
வீட்டில் உள்ள கிராம்பை தினந்தோறும் சிறிதளவு வாயில் வைத்து மென்று அந்த சாற்றினை விழுங்கும்போது பாதிப்பை சரி செய்யலாம்.
சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு புதினா சாறுடன் நீர் சேர்த்து தினந்தோறும் கொப்பளித்து வந்தால் வாயில் உள்ள கிருமிகள் கட்டுப்படுத்துவதோடு, வாயில் உள்ள சிறு புண்கள் ஆறிவிடும். இதன் மூலம் வாய் துர்நாற்றத்தை கட்டுப்படுத்தலாம்.
எலுமிச்சை சாறு, பட்டை பொடி, சோடா உப்பு மற்றும் தேன் இவற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து வைத்து தினந்தோறும் அந்த நீரினை கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றம் கட்டுப்படும்.
தினந்தோறும் ஒரு ஏலக்காயை வெறும் வாயில் மென்று என்பதினால் வாயிலுள்ள துர்நாற்றம் அகலும். ஏலக்காயுடன் சிறிது தேன் சேர்த்து அந்த நீரினை தினந்தோறும் எடுத்து கொண்டால், வாய் துர்நாற்றம் கட்டுப்படுத்துவதோடு வயிற்றில் உள்ள புண் ஆரி சிக்கலை சரிசெய்ய உதவும்.
வெங்காயம் பூண்டு போன்ற மசாலா பொருட்களை உணவுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளும் பொழுது வாயில் ஒரு விதமான கெட்ட வாடை ஏற்படுவது இயல்பு. இதனை கட்டுப்படுத்த சிறிதளவு உப்பினை வெந்நீரில் இட்டு நன்கு கொப்பளித்து உமிழ்ந்தால், இந்த துர்நாற்றமானது மறைந்துவிடும்.
No comments:
Post a Comment