"

Thursday, March 28, 2019

வரலாற்றில் இன்று மார்ச் 28 நடைபெற்ற வரலாற்று சுவடுகள்


வரலாற்றில் இன்று மார்ச் 28 உலகில் நடைபெற்ற சம்பவங்கள், முக்கிய தினங்கள், தலைவர்களின் பிறந்த நாள், அவர்களின் நினைவு நாள் மற்றும் முக்கிய வரலாற்று சுவடுகள் ஒரு தொகுப்பாக.

நிகழ்வுகள்
193 – ரோம் பேரரசன் பேர்ட்டினாக்ஸ் படுகொலை செய்யப்பட்டான்.
845 – ரக்னார் லொட்புரொக் என்பவனின் தலைமையில் நடந்ததாகக் கருதப்படும் வைக்கிங் தாக்குதல்களுக்கு பாரிஸ் அடி பணிந்தது.
1802 – ஓல்பேர்ஸ் என்பவர் 2 பேலெஸ் என்ற சிறுகோளைக் கண்டுபிடித்தார்.
1809 – மெடெலின் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரான்ஸ் ஸ்பெயினை வென்றது.

1879 – ஆங்கிலோ-சூலு போர்: பிரித்தானியப் படைகள் ஹுலோபேன் நகரில் இடம்பெற்ற சமரில் படுதோல்வியடைந்தனர்.
1930 – கொன்ஸ்டன்டீனபில், அங்கோரா ஆகியன இஸ்தான்புல் மற்றும் அங்காரா எனப் பெயர் மாற்றம் பெற்றன.
1939 – ஸ்பானிய உள்நாட்டுப் போரில் பிரான்சிஸ்கோ பிராங்கோ மாட்ரிட் நகரைக் கைப்பற்றினான்.

1979 ஐக்கிய அமெரிக்காவில் பென்சில்வேனியா மாநிலத்தில் ஓடும் ஸஸ்குவான ஆற்றின் கரையில் உள்ள மிடில்டன் நகரில் அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டது.
1994 – தென்னாபிரிக்காவில் சூலு இனத்தவர்களுக்கும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கும் இடையில் ஜோகார்னஸ்பேக் நகரில் இடம்பெற்ற கைகலப்பில் 18 பேர் கொல்லப்பட்டனர்.
1988 : ஹலப்ஜா நகரின் குர்திய இன மக்களுக்கு எதிராக இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டதில் சுமார் 5 ஆயிரம் பொது மக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டது.
2005 – இந்தோனீசியாவின் சுமாத்ராவில் இடம்பெற்ற 8.7 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தினால் 1,300 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புக்கள்
1862 – அரிஸ்டைட் பிறயண்ட், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1932)
1868 – மாக்சிம் கார்க்கி, ரஷ்ய எழுத்தாளர் (இ. 1936)
1892 – கோர்னெயில் ஹைமான்ஸ், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1968)
1919 – டி. கே. பட்டம்மாள், கருநாடக இசைப் பாடகி (இ. 2009)
1930 – ஜெரோமி பிரீட்மான், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்
1982 – சோனியா அகர்வால், இந்தியத் திரைப்பட நடிகை

இறப்புக்கள்
1943 – எஸ். சத்தியமூர்த்தி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர்
1982 – வில்லியம் ஜியோக், நோபல் பரிசு பெற்ற கனடியர்

(பி. 1895)
2006 – வேதாத்திரி மகரிஷி, தத்துவஞானி (பி. 1911)

சிறப்பு நாள்
சிலோவேக்கியா, செக் குடியரசு – ஆசிரியர் நாள்.

No comments:

Post a Comment

Adbox