"

Thursday, March 28, 2019

இனி IRCTC ரயில் டிக்கெட் இனி கூகுள் பேவில்



ரயில் டிக்கெட் இனி கூகுள் பேவில் (Google Pay) IRCTC டிக்கெட் புக் செய்து கொள்ளலாம். அதோடு மட்டுமல்லாமல் ரயிலின் இருக்கை எவ்வளவு காலியாக உள்ளது என்பதனையும் தெரிந்து கொள்ள முடியும். புக் செய்த டிக்கெட்டை ரத்து செய்து மீண்டும் பணத்தை எளிதாக திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு கூடுதல் கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை.

Google Pay மூலம் ரயில் டிக்கெட் எப்படி புக்கிங் செய்வது ?

Google Pay app ஓபன் செய்து அதன் பிறகு Businesses section யில் சென்று Trains என்பதை க்ளிக் செய்யுங்கள். New Ticket பகுதிக்கு செல்லவும் அதை க்ளிக் செய்யுங்கள்.

அதன் பிறகு ஏறும் இடம் மற்றும் இறங்கும் இடம்  தேதி போன்றவை நிரப்ப வேண்டும்.
இப்பொழுது  ரயில் மற்றும் அதில் இருக்கும் தகவல் வந்துவிடும், இருக்கை  தகவல்கள் பெற Check availability யில் க்ளிக் செய்ய வேண்டும்.
இப்போது தங்களுக்கு தேவையான இருக்கையை உறுதி செய்து அதை க்ளிக் செய்யுங்கள்.
இப்போது ஸ்டேஷன் உறுதிப்படுத்திய பிறகு IRCTC அக்கவுண்டில் தகவலை நிரப்புங்கள்.

உங்களிடம் அக்கவுண்ட் இல்லையெனில், இங்கே கிரெடிட் அக்கவுண்டிற்க்கு செல்வதன் மூலம் ஒரு அக்கவுண்ட் உருவாக்கலாம்.
பயணிகள் தகவல்களுக்கு பிறகு Continue யில் க்ளிக் செய்யவும்.
முன்பதிவு தகவலை உறுதிசெய்து Continue தட்டவும்
பணம் செலுத்துவதற்க்கு நீங்கள் அதற்க்கான ஆப்ஷனை தேர்ந்தெடுத்து Proceed to continue என்பதில் க்ளிக் செய்யவும்.

இப்பொழுது உங்களின் UPI PIN நிரப்புங்கள் அதன் மூலம் IRCTC website யில் செல்லஇங்கு உங்களின் IRCTC பாஸ்வர்ட் மற்றும் Captcha code நிரப்புங்கள்
Submit இல் தட்டவும், அதன்பின் உங்கள் டிக்கெட் புக் செய்யப்பட்டு, உறுதி செய்யப்பட தகவல் திரையில் தோன்றும். இப்போது கூகுள் பேமெண்ட் மூலமாக ரயில் டிக்கெட்  பெற்றிருப்பீர்கள்.

No comments:

Post a Comment

Adbox