கறிவேப்பிலை என்பது “கறிவேம்பு இலை” என்ற சொல் தான் பிற்காலத்தில் மருவிக் கறிவேப்பிலை என்று ஆனது.
கறிவேப்பிலைக்கென்று தனித்துவமான மணமும் சுவையும் உள்ளது. இதன் சுவை சற்றுக் காரத்துடன் கலந்த கசப்புத் தன்மையைக் கொண்டிருக்கும். நம்முடைய பாரம்பரியமான சமையல் முறைகளில் கறிவேப்பிலை தவறாமல் இடம்பெறும்.
கறிவேப்பிலையின் மருத்துவ பயன்கள்
கறிவேப்பிலையில் போதுமான அளவு இரும்புச் சத்தினையும் போலிக் அமிலத்தினையும் (Folic Acid) கொண்டுள்ளது.
ஒரு நாளைக்கு இரண்டு கறிவேப்பிலைகள் வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வருவது இரத்த சோகைக்கான சிறந்த சிகிச்சை முறையாகும்.
ஒரு நாளைக்கு இரண்டு கறிவேப்பிலைகள் வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வருவது இரத்த சோகைக்கான சிறந்த சிகிச்சை முறையாகும்.
கறிவேப்பிலையைப் பொடி செய்து உண்பதனால் வயிற்றுப் போக்கு குணமாகும். மேலும் கறிவேப்பிலையை மலச்சிக்கல் பிரச்சினையைச் சமாளிக்கக்கூடிய ஒரு மலமிளக்கியாகப் பயன்படுத்தலாம். கறிவேப்பிலையின் இலை, வேர், பட்டை, தண்டு மற்றும் பூக்களைத் தண்ணீரில் கொதிக்க வைத்துப் பருகினால் வயிற்றில் இருக்கும் அனைத்து விதமான தொந்தரவுகளிலிருந்தும் விடுபட முடியும்.
கறிவேப்பிலை இலைகளில் வைட்டமின் – ஏ நிறைந்து காணப்படுகிறது. இந்த இலைகளில் இருக்கும் வைட்டமின் ஏ கரோட்டினாய்டுகளைக் கொண்டுள்ளது. எனவே வைட்டமின் – ஏ செய்ல்பாடு கண்ணின் கார்னியா சேதமடைவற்கான ஆபத்திலிருந்து கண்களைப் பாதுகாக்கிறது.
வைட்டமின் – ஏ குறைபாடு கண்களில் ஒரு விதமான பார்வை குறைபாட்டினை றேபடுத்த நேரிடலாம்.
வைட்டமின் – ஏ குறைபாடு கண்களில் ஒரு விதமான பார்வை குறைபாட்டினை றேபடுத்த நேரிடலாம்.
சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து மிதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் குறையும். தலை முடியில் நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதயம் மற்றும் ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும்.
இது தவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள், மருத்துவர்கள்.
வெறும் வயிற்றில் தினமும் கறிவேப்பிலை இலையை மென்று சாப்பிட வேண்டும். இப்கபடியே 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் பருமனாவது தவிர்க்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறும் அளவும் குறைந்துவிடும்.
இளம் வயதில் நரை முடி வராமல் தடுக்க கறிவேப்பிலை பயன்படும் என்பது தெரிந்த விஷயம். ஆனால் தெரியாத விஷயம் ஒன்று உள்ளது. அதாவது, நரை முடி வந்தவர்களும், உணவிலும், தனியாகவும் கறிவேப்பிலையை அதிகமாக சாப்பிட்டு வந்தால் நரை முடி போயே போச்சு.
இது அனுபவ ரீதியாகக் கண்ட உண்மை.
இது அனுபவ ரீதியாகக் கண்ட உண்மை.
கறிவேப்பிலையை தலையில் தேய்க்கும் எண்ணெயில் போட்டு காய்ச்சி ஆறவைத்து பாட்டிலில் அடைத்து தலையில் தேய்த்து வந்தால் இளநரை மாறும்.
No comments:
Post a Comment