"

Thursday, February 21, 2019

இன்றய நாள் இதுவரை முக்கிய செய்திகள் தொகுப்பு ஓர் லைவ் அப்டேட் - பிப்ரவரி 21


கோடை வெயிலால் அதிகரிக்க உள்ள மின் தேவையை நினைத்து, மின் வாரியம் கவலை.தமிழகத்தில், தினசரி மின் தேவை, சராசரியாக, 14 ஆயிரம் மெகா வாட் என்றளவில் உள்ளது. மின் தேவை, 16 ஆயிரம் மெகா வாட்டை தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் இன்று காலை 11.50 மணியளவில்,விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.இவர் திமுக கூட்டணிக்கு விஜயகாந்தை கொண்டு வந்து சேர்ப்பதில், முக்கிய பங்காற்ற கூடும் என தெரிகிறது.


அட்டக்கத்தி, பீட்சா, சூதுகவ்வும் உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்த சிவி குமார்,அடுத்தப்படியாக கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ் என்ற படத்தை இயக்கி உள்ளார்.கேங்ஸ்டர் கதையில் உருவாகி உள்ள இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. நடிகர் தனுஷ் டுவிட்டரில் வெளியிட்டார்.

சென்னை மற்றும் வேலூரில் மொத்தம் 31 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் பிரபலமான தொழிலதிபர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.




பிரதமர் மோடிக்கு சியோல் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சியோலில் உள்ள புகழ்பெற்ற யோக்சி பல்கலைக்கழக்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அங்கு நிறுவப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை மோடி, தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் மற்றும் ஐநா சபை முன்னாள் பொதுச்செயலாளர் பான் கிமூன் ஆகியோர் திறந்து வைத்தனர். பிரதமர் நரேந்திர மோடிக்கு சியோல் அமைதிக்கான விருது நாளை வழங்கப்படுகிறது.

உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு தடை விதிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) இந்திய கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தி இருக்கிறது. அப்படி தடை விதிக்காவிட்டால் உலக கோப்பை போட்டியில் இருந்து விலகப்போவதாக மிரட்டல் விடுக்கும்.இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் ஜூன் 16-ந்தேதி மான் செஸ்டரில் நடக்கிறது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று விட்டது. 


சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி வரும் 24-ம் தேதி கோரக்பூரில் தொடங்கி வைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய பாதுகாப்பு படையினருக்கு கடுமையான உயிர்ச்சேதம் ஏற்படுத்தும் வகையில் மீண்டும் மிகப்பெரிய தாக்குதல் நடத்த ஜெய்ஷே முகமது தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர். 

வங்கதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 69 பேர் உயிரிழந்துள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி ரசாயன குடோனாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. 





No comments:

Post a Comment

Adbox