கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டதால், வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பி செலுத்த வங்கி தான் பொறுப்பு என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு. இந்த முடிவால் வாடிக்கையாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நாம் வழக்கமாக பணம் எடுக்க கையாலும் மெசினாக ஏடிஎம்கள் இருக்கின்றன. நாம் பணம் எடுக்கும் போது, வங்கி டெபிட் கார்டை பொருத்துகிறோம். பிறகு நமக்கு தேவையான பணத்தை எடுக்க தேர்வு செய்வோம்.
நாம் பணத்தை எடுத்துவிட்டோம் என்று ஹாயாக வீடு திரும்புவோம். ஆனால், ஏடிஎம் மெசின்களில் ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்டிருப்பதால், ஹேக் செய்து பணத்தை திருடிவிடுகின்றனர். நம்முடைய இ-மெயில் அனுப்பும், மொபைல் போன்களில் உள்ள ஆப்புகளில் மூலமும் நம்முடைய அனைத்து கணக்கு விவரங்கைளயம் ஹேக் செய்து பணத்தை திருடிவிடுகின்றனர்.
இந்நிலையில், கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவர், பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்துள்ளார். அவரது கணக்கில் இருந்து திருட்டுத்தனமாக ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது. இதை தனக்கு திருப்பித்தர வங்கிக்கு உத்தரவிடக்கோரி, வாடிக்கையாளர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டதால், வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பி செலுத்த வங்கி தான் பொறுப்பு என தீர்ப்பு . இந்த முடிவால் வாடிக்கையாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment