"

Thursday, February 7, 2019

கூகுள் அக்கௌன்ட் பாஸ்வேர்டு ஹேக் செய்யப்பட்டுள்ளதா ? கண்டறிய கூகுள் வழிமுறை.

இன்று இணைய பயனாளர்கள் பாஸ்வேர்டு ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய புதிய எக்ஸ்டென்ஷனை கூகுள் நிறுவனம் அறிமுகம். 



மக்கள் இணையத்தில் வங்கி சார்ந்த தகவல்களை இமெயில் மூலம் அதிகம் பயன்படுத்துகின்றனர், பின்பு அதே சமயம் பேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்ற சமூகவலைதளங்களும் மக்கள் அதிகளவில் பயன்படுத்திவருகின்றனர். 
அன்மையில்பேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்ற சமூகவலைதளங்கள் மூலம் பாஸ்வேர்டுகள் ஹேக் செய்யும் செய்யும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

இணையதளங்களை பயன்படுததும் போது ஒரு வேளை பயனாளர்களின் பாஸ்வேர்டு ஹேக் செய்யப்பட்டால், அதை உடனடியாக தெரிவிக்கும் வகையில் Password Checkup extension என்ற ஒரு பயன்பாட்டை கொண்டு வந்துள்ள கூகுள் நிறுவனம்.

இந்த புதிய பயன்பாடு க்ரோம் பயனாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது, மேலும் இந்த எக்ஸ்டென்ஷனை க்ரோம் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.பின்பு ஏதேனும் இணையதளத்தில் உங்கள் பாஸ்வேர்டை டைப் செய்யும் போது, ஒரு வேளை 

பாஸ்வேர்டு ஹேக் செய்யப்பட்டால், Password Checkupஉடனுக்குடன் எச்சரிக்கை நோட்டிபிக்ஷேன் அனுப்பி விடும். இந்த புதிய எக்ஸ்டென்ஷனை கூகுள் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

Adbox