பிப்ரவரி 5ம் தேதி தேசிய பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. google நிறுவனம் இணைய பாதுகாப்பு தினத்தை ஒட்டி தனது பயனாளர்களுக்கு மின்னஞ்சல் கணக்கின் பாதுகாப்பு தன்மையை சோதனை செய்துகொள்ள வழிமுறை செய்துள்ளது. அதன்படி கூகுள் சர்ச் என்ஜினில் நுழையும் பொழுது அதனருகே செக்யூரிட்டி செக்கப் அமைப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதில் பயனர்கள் தங்களது மின்னஞ்சல் கணக்கின் மூலம் நாம் பயன்படுத்தும் அந்த கணக்கானது பாதுகாப்பான முறையில் உள்ளதா என்பதை இரண்டு நிமிடங்களில் சோதனை செய்து கொள்ளக்கூடிய வழிமுறை ஏற்படுத்தியுள்ளது. இந்த இணைப்பில் இருந்து நாம் நம்முடைய கணக்கினை சரிபார்த்துக் கொள்ள முடியும்.
இதன் மூலம் நாம் பயன்படுத்தும் மொபைல் தொலைபேசி கணிப்பொறி மற்றும் நம்முடைய மின் கணக்கு மின்னஞ்சல் கணக்கு வேறு ஏதேனும் மூன்றாம் நபர் தளத்தில் பயன்படுத்துவது போன்ற விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள முடியும். நம்முடைய கணக்கு வேறு எவராவது தவறாக பயன்படுத்தி இருந்தாலும் அல்லது ஹேக் செய்யப்பட்டு இருந்தாலும் நாம் எளிதில் அறிந்து கொள்ள இது வழி வகை செய்யும். ஆகவே இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு கூகுள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
மேலே உள்ளது போல உங்கள் திரையில் தோன்றினால் பாதுகாப்பாக உள்ளது.அல்லது அடுத்து உள்ளது போல தோன்றினால் பாதுகாப்பு குறைபாடு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.
மேலும் பாதுகாப்பை உறுதி செய்ய லிங்க்கை கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment