தற்பொழுது ஆன்லைனில் பண பரிவர்த்தனை என்பது சர்வசாதாரணமாகி விட்டது. இது மிகவும் எளிமையாக இருப்பதன் காரணத்தினால் அனைவரும் ஆன்லைனில் பண பரிவர்த்தனை மற்றும் ஆன்லைனில் பொருட்களை வாங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. வங்கிகளும் வங்கி சார்ந்த நிறுவனங்களும் ஆன்லைன் சேவையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இருந்தபோதிலும் ஆன்லைனில் கொள்ளையில் என்பது தினந்தோறும் புதுப்புது யுத்திகளை கொண்டு நடந்து வருகிறது. தற்சமயம் ஆன்லைன் ஹேக்கர்கள், பண பரிவர்த்தனையை செய்பவர்களின் எண்ணிற்கு ஒரு லிங்கையும் அதோடு கூடவே ஒரு ஒன் டைம் பாஸ்வேர்டு அனுப்பி வைக்கின்றன. அந்த லிங்கில் தங்களுடைய அக்கவுண்ட் ஆனது அப்டேட் செய்யப்பட வேண்டும் என்ற செய்தியுடன் ஒரு லிங்க் ஆனது நம்முடைய மொபைலுக்கு வந்து சேரும். அந்த லிங்கை கிளிக் செய்தவுடன் தங்களுடைய ஒன் டைம் பாஸ்வேர்டு தானாகவே அந்த லிங்க்கு உடன் அப்டேட் செய்து கொண்டு வங்கியிலுள்ள பணத்தினை கண்ணுக்குத் தெரியாத ஒருவரின் வங்கி எண்ணுக்கு மாற்றம் செய்துவிடும்.
இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் ஆனது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மிகவும் அதிகமாக நடந்து வருகிறது. தினந்தோறும் புதிய புதிய அப்டேட்கள் வங்கிகளில் இருந்து வந்து கொண்டிருந்தாலும் அதை ஓவர்டேக் செய்வது போல ஹேக்கர்கள் புதிய புதிய நடைமுறைகளில் கொள்ளையடித்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.
No comments:
Post a Comment