"

Saturday, January 19, 2019

Nike adaptive pb (நைக் அடேப்ட் பிபி) தானாக லேஸ் கட்டும் ஷூ


நைக் நிறுவனம் அதன் முதல் தானாக லேஸ் கட்டும் ஷூக்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஷூ கூடைப்பந்து  வீரர்களுக்கு பொருத்தமானதாக தயாரித்து உள்ளது. 


இது விளையாட்டு வீரரின் அனுபவத்தை மேம்படுத்தும் என கூறியுள்ளார். ஷூவில் உள்ள ஒரு பொத்தான் மூலமாகவோ அல்லது உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள செயலியின் மூலமாகவோ ஷூவின் பலர் லேஸை கட்டுப்படுத்த முடியும்.


அடாப்ட் பிபி-ஐ காலில் அணியும் போது, அதனுள் இருக்கும் பயிற்சியளிக்கப்பட்ட கியர்களுடன் கூடிய மோட்டார், உங்கள் பாதங்களுக்கு தேவையான விசையை உணர்ந்து அதன் லேஸ்களை தானாகவே சரிசெய்து கொள்ளும்.  ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் அது 14 நாட்களுக்கு நீடிக்கும் என்கிறது நைக் நிறுவனம். ஒவ்வொரு ஜோடி காலணிகளுடன் தரப்படும் க்யூஐ வயர்லெஸ் சார்ஜிங் மூலம் 3 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்யமுடியும்.

அடாப்ட் மொபைல் செயலியின் மூலம் விளையாட்டு வீரர்கள், அந்த குறிப்பிட்ட போட்டிக்கு தேவையான அளவு பேட்டரி சார்ஜ் செய்து கொள்ள முடியும் அதன்  அளவை அறிந்துகொள்வது, எல்ஈடி நிறங்களை மாற்றுவது போன்றவற்றையும் செய்ய இயலும்.  இந்த அடாப்ட் பிபி 320டாலர் என தனது விலையை குறைத்து நிர்ணயித்துள்ளது. இந்திய விலையில் தோரயமாக 26000 ரூபாய்.


No comments:

Post a Comment

Adbox