பழைய ஓய்வூதிய திட்டத்தை உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு ஜனவரி 22-ஆம் தேதி முதல் போராட்டம் தொடந்து நடைபெற்று வருகிறது. இன்று குடியரசு தினத்தில் அனைத்து ஆசிரியர்களும் பணியில் சேரவேண்டும் என அரசு நிப்பந்தித்தது. ஆனால் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தீவிரமாக போரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து அமைச்சர் திரு டி . ஜெயக்குமார் அவர்கள் கூறுகையில் அரசு கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளது எனவே கோரிக்கைகளை ஏற்கமுடியாது என கூறியுள்ளார். இந்நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தீவிர போராட்டத்துக்கு செவிசாய்ப்பது போல மீண்டும் ஒரு அறிக்கை.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டைன் அவர்கள் வெளியிட்டுள்ளார். அதில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பள்ளிகள் மூடப்படுவதாக தவறான தகவல்கள் பரப்புவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.ஏழை மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பாக முதலமைச்சர் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசித்து விரைவில் நல்ல செய்தி வெளிவரும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பாக முதலமைச்சர் பழனிசாமியுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சந்திப்பு நடைபெற்றது. ஆசிரியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்தும், சாத்தியமுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்தும் ஆலோசனை இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment