"

Saturday, January 26, 2019

ஆசிரியர்கள் இன்று பணியில் சேர்ந்தால் நடவடிக்கை இல்லை பள்ளிக் கல்வித்துறை



பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் கடந்த ஜனவரி 22ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியை மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. அதன்படி நேற்று பள்ளிக்கு வராத ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அளித்துள்ளது. 

மேலும் மற்றொரு சுற்றறிக்கையில் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி குடியரசு தினத்தன்று பள்ளிக்கு ஆசிரியர்கள் வந்து பணியில் சேருவதற்கு ஆசிரியர்களுக்கு அனுமதித்துள்ளது.

இன்று பள்ளியில் பணியில் இணையும் ஆசிரியர்களுக்கு  No work No pay  என்ற அடிப்படையில் அவர்களை இணைத்துக் கொள்ளலாம். இன்றும் பள்ளிக்கு வராமல் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை 17 -B பாயும். பள்ளியில் ஆசிரியர்கள் இன்று கையொப்பமிட வேண்டும்.

பள்ளிக்கு வராத ஆசிரியர் பணி இடத்தினை வேலை காலி இடமாக அறிவிக்கப்படும்.  அவ்விடத்தில் தற்காலிக ஆசிரியர்கள் மாதம் ரூபாய் பத்தாயிரத்திற்கு தொகுப்பூதியமாக அவர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பள்ளிக்கல்வி இணை இயக்குனர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் பள்ளியினுடைய செயல்பாடுகளை கண்காணித்து அறிக்கை அளிக்க வேண்டுமென தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Adbox