"

Wednesday, January 23, 2019

புதிதாக வீடு வாங்கி உள்ளீர்களா....? விரைவில் உங்களுக்கு இன்கம்டாக்ஸ்ல் இருந்து நோட்டீஸ் வரும்.



Income tax 269SS விதிகளின்படி 2015ஆம் பிறகு வீட்டு மனையோ அல்லது வீட்டையோ வாங்கி பத்திர பதிவு செய்திருந்தால் அவர்கள் வருமான வரிச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும். 

ஒரு நபர் வாங்கும் சொத்தின் மதிப்பு 20,000 ரூபாய்க்கு மேல் அதன் மதிப்பு இருந்தால்   டிடி அல்லது காசோலையாகவோ அல்லது நெட் பேங்கிங் மூலமாகவோ பரிவர்த்தனை செய்து இருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் பணமாகவே பரிவர்த்தனை செய்து இருந்தால் சொத்து வாங்குபவர்கள் வருமான வரித் துறைக்கு உரிய தகவல் தெரிவிக்க வேண்டும்.

அவ்வாறு தகவல் தெரிவிக்காத நபர்களின் மீது வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்க உள்ளது. அதன் படி டெல்லியில் உள்ள அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களில் வருமான வரித்துறை எவரெல்லாம் அசையா சொத்து வாங்கி உள்ளார் என  தகவல் திரட்டப்பட்டு வருகிறது. 

அவ்வாறு பத்திர பதிவு செய்தவர்கள் வருமான வரித் துறைக்கு தகவல் தெரிவிக்காமல் இருந்தால் அவர்களின் மீது நடவடிக்கையும் அபராதம் விதிக்க வருமான வரித்துறை தயாராகி உள்ளது. இனி புதிதாக வீடு வாங்குபவர்கள் இருபதாயிரம் ரூபாய்க்கு மேல் பத்திர பதிவு செய்யும் போது வருமான வரிக்கான தகவலை தெரிவித்து விட வேண்டும். 

அவர் தெரிவிக்கவில்லை என்றால் அவர்களின் மீது வருமான வரித்துறை 269ss சட்டப்படி அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் என தெரிகிறது. இதற்கான முக்கிய காரணம் இந்தியாவில் கள்ள பணமானது தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் அதிகளவு முதலீடு செய்வதன் காரணமாக இத்தகைய நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Adbox