"

Wednesday, January 2, 2019

எளிமையாக மலச்சிக்கலில் இருந்து விடுபட - வீட்டு வைத்தியம்..!

நாம் அன்றாட வாழ்வில் உணவில் பல்வேறு குறைபாடுகளுடன் கூடிய உணவை தான் எடுத்துக்கொள்கிறோம். அதோடு கூடிய உடல் உழைப்பும் மிக மிக குறைந்து காணப்படுகிறது. இதனால் நம் உடலில் பல்வேறு உபாதைகள் ஏற்படுகிறது. 



அதில் ஒன்றான மலச்சிக்கல், தினசரி நாம் உண்ணும் உணவானது முழுமையாக செரிமானம் அடைந்து பின்பு மட்டுமே சரிவர உடலை விட்டு வெளியேறும். சரியாக செரிமானம் ஆகாத உணவு மலச்சிக்கலை ஏற்படுத்திவிடும். மலச்சிக்கலை சரிசெய்வதற்கு அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் பழங்கள் மற்றும் நீர் அதிகமாக எடுத்துக்கொண்டால் பொதுவாக மலச்சிக்கல் என்பது இல்லாமல் போய்விடும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் நார்ச்சத்து உள்ள உணவுகளை விட அதிகமாக junk food என அழைக்கப்படும் துரித வகை உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்கிறோம். இந்த வகை உணவுகள் எளிதில் செரிமானமடையாமல் மலச்சிக்கல் ஏற்படுத்திவிடும். பின்னாளில் அது மூல நோய் மற்றும் அதை சார்ந்த பல வியாதிகளை ஏற்படுத்திவிடுகிறது.

இந்த மலச்சிக்கலை சரிசெய்வதற்கு ஒரு எளிமையான வழி ஆலிவ் ஆயிலை பயன்படுத்தி சரி செய்யலாம். இதற்கு தேவையான பொருள் எலுமிச்சை சாறு 2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் ஒரு ஸ்பூன். இரண்டு டேபிள்ஸ்பூன் எலுமிச்சைச் சாறு ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யை இரண்டையும் நன்கு கலக்க வேண்டும். 


இவ்வாறு கலக்கப்பட்ட ஆலிவ் எண்ணையை  உணவு உண்பதற்கு முன்பு காலையிலும் மற்றும் இரவும் எடுத்துக்கொண்டால் மலச்சிக்கலிலிருந்து மிக எளிதாக விடுபட முடியும். அதோடில்லாமல் இது உடலை சுத்தப்படுத்தும்  மலச்சிக்கலை நீக்கும் மேலும் நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் பாதுகாக்கும். இதன் மூலம் மிக எளிமையாக மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்.

No comments:

Post a Comment

Adbox