"

Thursday, October 11, 2018

வயிற்றுப்புண் மற்றும் வாயிலிருந்து வெளியேறும் துர்நாற்றம் சரி செய்ய எளிய மருத்துவம்


உடல் உறுப்புகளில் ஏற்படும் அழற்சி மற்றும் புண் ஆகியவற்றை தினந்தோறும் பயன்படுத்தும் உணவுப் பொருட்களிலிருந்து எளிதாக சரி செய்யும் முறையினை காண்போம். 


வயிற்றில் புண் இருந்தால் நம் வாயின் உள்ளேயும் புண் ஏற்படும். பொதுவாக நமது உணவுப்பாதையில் அல்லது இரைப்பையில் புண் ஏற்பட்டால் நம் சுவாச பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவது போன்ற உணர்வு நமக்கு ஏற்படும். இது நம் அருகில் உள்ள நபர்களுக்கும் ஒருவித சங்கடத்தை உண்டாக்கும். இதற்கு முக்கியமான காரணம் நாம் சரியான நேரத்தில் உணவு எடுத்துக்கொள்ளாமல் இருப்பதேயாகும். 


இதனை சரி செய்வதற்கு நம் வீடுகளில் தினந்தோறும் பயன்படுத்தப்படும் தேங்காயிலிருந்து எளிமையான மருந்தினை தயார் செய்யலாம். இதற்கு தேங்காய் இரண்டு அல்லது மூன்று துண்டுகள்,  கைப்பிடி அளவு மணத்தக்காளி கீரை, இரண்டு ஸ்பூன் தேன். இதில் தேங்காய் துண்டுகளை நீரில்லாமல் மிக்சியில் அரைத்து அதிலிருந்து தேங்காய் பால் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் மணத்தக்காளி கீரையை மிக்சியில் அரைத்து அதிலிருந்து மணத்தக்காளி சாரு எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்விரண்டையும் கலந்து அதனுடன் இரண்டு ஸ்பூன் தேன் சேர்த்து இந்த மருந்தினை தயார் செய்யலாம். 

தயார் செய்யப்பட்ட மருந்தினை வெறும் வயிற்றில் பருகும் பொழுது உணவு குடல் மற்றும் இரைப்பையில் லேசான எரிச்சலை ஏற்படுத்தும். ஆனால் தொடர்ந்து இந்த மருந்தினை  தொடர்ந்து ஐந்து நாட்கள் காலையில் எடுத்துக் கொள்ளும் பொழுது வயிற்றிலுள்ள புண்களை சரி செய்து வாயிலிருந்து வெளியேறும் துர்நாற்றத்தையும் விரைவில் கட்டுப்படுத்தும். அதோடு மட்டுமில்லாமல் வாய்ப்புண் மற்றும் குடல் பகுதியில் சேர்ந்துள்ள வாயுவினை வெளியேற்றும். வயிறு உப்பசம் மற்றும் தேவையற்ற கழிவுகளை விரைவில் வெளியேற்றிவிடும். இதனால் நம்முடைய இயக்கம் சுறுசுறுப்படைவது மட்டுமில்லாமல் ஒருவித புத்துணர்ச்சியும் ஏற்படுத்தும்.

No comments:

Post a Comment

Adbox