"

Tuesday, September 4, 2018

கசப்புத்தன்மை கொண்ட சுண்டக்காயின் இனிப்பான மருத்துவ பலன்கள்

சுண்டை காய் ஈரமான நிலங்களிலும், வீட்டுத் தோட்டங்களிலும் எளிதாக வளர்க்கக்கூடிய தாவரம். இது நம்முடைய வீட்டு சமையல் கூடங்களில் பயன்படுத்தப்படும் காய்கறிகளில் ஒன்று. மிக அதிகமாக வற்றல், கூட்டு மற்றும் குழம்பு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. 


இந்த சுண்டைக்காய் சிறிது கசப்புத்தன்மை கொண்டுள்ளது, ஆனால் அதிக மருத்துவ குணங்களை உள்ளடக்கியுள்ள பதார்த்தங்களில் ஒன்று. சுண்டை காய் கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. தொண்டைச் சளியைக் குறைக்கும், வயிற்றுப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும், பசியை அதிகமாக்கும். 

சுண்டைக்காய் வற்றல்,மாதுளை ஒடு இரண்டையும் சேர்த்து அரைத்து, தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும். சுண்டைக்காய் வற்றல்,சீரகம்,சோம்பு மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து தினமும் காலை , மாலை இரு வேளையும் இரண்டு கிராம் சாப்பிட்டு வந்தால் தைராய்டு கோளாறுகள் குணமாகும்.

சுண்டைக்காயை அடிக்கடி சமையலில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை குணமாகும்.
சுண்டைக்காய் வற்றல், ஒமம் - இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து, தினமும் காலையில் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் குடல் பூச்சிகள் ஒழியும். சுண்டைக்காய் வற்றலை பொடி செய்து, ஐந்து கிராம் பொடியைத் தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.


No comments:

Post a Comment

Adbox