பிறந்த தேதியில் தவறு இருந்தால் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப் படுவார்கள் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பணி பதிவேட்டில் பிறந்த தேதி 10-ம் வகுப்பு சான்றிதழில் கூறப்பட்ட தேதியே இறுதியான ஆதாரமாகக் கொள்ளப்படுகிறது.
அரசு வேலையில் உள்ள அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் செய்பவர்களின் பிறந்த தேதி, கல்விச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் மற்றும் ஆதார் கார்டில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். குறிப்பாக இதில் 10-ம் வகுப்பு சான்றிதழில் கூறப்பட்ட பிறந்த தேதியே இறுதியான ஆதாரமாகக் கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், தமிழக அரசு கல்வித்துறை சார்ந்த அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தங்களின் பிறந்த தேதியில் தவறு உள்ளதாக திருத்தம் கோரி விண்ணப்பித்தால், அதற்கான ஆதார ஆவணமாக சம்பந்தப்பட்டவர்களின் 10-ம் வகுப்பு சான்றிதழை ஆய்வு செய்ய வேண்டும். வயதில் திருத்தம் இருந்தால் 10-ம் வகுப்பு சான்றிதழை அடிப்படையாகக் கொண்டு தான் திருத்த வேண்டும். அதற்கான விசாரணை முடியும் வரை குறிப்பிட்ட அரசு அலுவலர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுவார்கள். இறுதி விசாரணையிலும் குளறுபடிகள் இருந்தால் பணி நீக்கம் செய்யப் பட்டு, அவர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் அரசு சார்ந்த இதர பலன்களும் ரத்து செய்யப் படும் எனக் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment