இந்த காது வலி பெரும்பாலும் அழற்சி, தொற்று மற்றும் அதிக இரைச்சல் போன்றவற்றால் ஏற்படும். காதுக்குள் குடு குடுவென சத்தம் போல் ஏற்படும்.இப்படி வலி ஏற்பட்டால் உடனே நாம் காதுக்குள் எதையாவது கொண்டு நுழைத்துக் கொண்டு இருப்போம். இதனால் உங்கள் காதில் உள்ள மெல்லிய சவ்வுகள் பாதிப்படையலாம். மாறாக இதற்கு சில கை வைத்திய முறைகள் உள்ளன.
சிறிது ஓமம் மற்றும் 2 நசுக்கிய பூண்டு, 50 மி.லி நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்ச வேண்டும். பூண்டும், ஓமமும் சிவப்பாக மாறும் வரை சூடுபடுத்தி ஆற விடவும். பிறகு இந்த எண்ணெய்யை காது சொட்டு மருந்தாக பயன்படுத்தி வாருங்கள்.
இரண்டு பூண்டு, 2 டேபிள் ஸ்பூன் கடுகு எண்ணெய்யை இப்பொழுது எண்ணெய்யை லேசாக சூடேற்றி பூண்டு கறுப்பாக மாறும் வரை காய்ச்சி ஆற விடவும். இந்த எண்ணெய்யை காதில் 2-3 சொட்டுகள் விட்டால் உங்கள் காது தொற்று குணமாகும்.
கொஞ்சம் துளசி இலைகளை நசுக்கி அதன் சாறை மட்டும் வடிகட்டி எடுத்து 2 சொட்டுகள் காதில் விடவும். மேலும் கிராம்பை நல்லெண்ணெய்யில் போட்டு வதக்கி இந்த வெதுவெதுப்பான எண்ணெய்யை சில சொட்டுகள் காதில் ஊற்ற வலி குறையும்.
இஞ்சி சாற்றை கூட பாதிக்கப்பட்ட காதில் ஊற்றி வர நல்லா வலி குறையும்.வெங்காயத்தின் சாற்றை பிழிந்து, அதை காட்டன் பஞ்சில் நனைத்து அதை காதில் பிழிந்து விட அழற்சி மற்றும் மைக்ரோ பியல் தொற்றால் ஏற்பட்ட அரிப்பு, சிவத்தல், வலி குணமாகும்.
No comments:
Post a Comment