"

Monday, July 23, 2018

ஐ ஆர் சி டி சி எவ்வாறு எளிதாக தட்கல் டிக்கெட்டை பெறுவது? IRCTC Tatkal Ticket .





இன்றைய காலகட்டத்தில் ரயில் டிக்கெட் பெறுவது என்பது குதிரைக்கொம்பாக உள்ளது. அதிலும் குறிப்பாக பண்டிகை கால கட்டத்தில் இது ஒரு சவாலான காரியமாக இருக்கிறது. இப்படிப்பட்ட தருணத்தில் சில நிமிடங்களில் தீர்ந்துவிடும் தட்கல் டிக்கெட் பெறுவது சாத்தியமா ? எவ்வாறு IRCTCல் எளிய முறையில் இந்த டிக்கெட்டுகளை பெறுவது எப்படி என்பதை பார்ப்போம்.


தட்டல் நேரம் 11 மணி முதல் ஸ்லீப்பர் வகுப்புகள் மற்றும் ஏசி வகுப்புகளுக்கு 10AM ஆகியவற்றுடன் இருப்பதால், சரியான நேரத்தில் உள்நுழையுங்கள்.

எனது மாஸ்டர் பட்டியலில் உள்ள பயணிகள் அனைவரின் விவரங்களையும் சேமித்து கொள்ளவும், இது உங்களது irctc அக்கவுண்டில் my account பிரிவில் உள்ள மாஸ்டர் பட்டியலில் உள்ளது, நீங்கள் பயணிக்க விரும்பும் பயணிகள் பட்டியல் ஒன்றை உருவாக்கவும்.


அதன் கீழே உள்ள" புறப்படும் இடம்", " சேருமிடம்" பயணிக்கும் வண்டி எண், வகுப்பு, சிறப்பு ஒதுக்கீடு போன்ற தகவல்களை சேமித்து வைத்துக் கொள்ளவும். இதனோடு கட்டணம் செலுத்தும் முறை மற்றும் வங்கி போன்றவற்றையும் சேமித்து வைத்துக் கொள்ளவும்.


இப்பொழுது தட்கல் துவங்கும் நேரத்திற்கு முன்பாக குறைந்தபட்சம் அரை மணி நேரத்திற்கு முன்னால் login செய்து கொள்ளுங்கள். முன்பதிவுக்கான நேரம் துவங்கியவுடன் பயணத்திற்கான இடம் மற்றும் நாளை தேர்வு செய்து கொள்ளவும். இப்பொழுது saved passenger list காணப்படும், அதை கிளிக் செய்தால் நீங்கள் ஏற்கனவே உருவாக்கி வைத்துள்ள பயண பட்டியலை தேர்வு செய்து கொள்ளவும். பின்னர்  தேர்வு செய்தபின் next பட்டனை கிளிக் செய்து payment options உறுதி செய்யவும். இதில் குறிப்பாக ஐ ஆர் சி டி சி wallet ஆக்டிவ் செய்து வைத்திருந்தால் இந்த payment options தேர்வுசெய்யவும். இந்த முறையில் உங்கள் ரயில் டிக்கெட் மிக எளிமையாக பெற இயலும்.  



No comments:

Post a Comment

Adbox