உலகம் முழுவதும் அதிகளவில் மேம்படுத்தப்படும் சமூக செயலிகளில் மிக முக்கியமானது whatsapp. வாட்ஸ் அப்பை இன்று சிறிது நேரம் கூட சிலரால் இருக்க இயலாது என்ற நிலையில் வாழ்வில் ஊடுருவி விட்டது. குறிப்பாக இந்தியாவில் மிக அதிகமாக வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி புகைப்படங்கள் வீடியோக்கள் என அதிகமாக பகிரப்படுகிறது. இந்த whatsapp இன் ஆல் சில நேரங்களில் அசம்பாவிதங்கள் மற்றும் கொடுமையான சம்பவங்கள் அரங்கேறுகிறது.
இதை தடுக்கும் நோக்கில் நிறுவனமானது அதிகளவில் பார்வர்ட் செய்யப்படும் செய்திகள் தேவையற்ற அசம்பாவிதங்கள் நடைபெறுவது கண்காணித்துள்ளது. மீண்டும் மீண்டும் பார்வர்ட் செய்யப்படும் தவறான தகவல்களால் சமூகத்தில் பிரச்சினைகளை உருவாக்குவதற்கு காரணமாக உள்ளது. இதை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒரு நபர் whatsappஇல் குறுஞ்செய்தியை அதிகபட்சம் ஐந்து நபருக்கு மட்டுமே பார்வர்ட் செய்யப்படும் ஆப்ஷனை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம் தேவையற்ற செய்திகள் மற்றும் வீடியோக்கள் பரவுவதை தடுக்க இயலும். மேலும் போலி இணையதள லிங்குகளை பார்வர்ட் செய்யப்படும்போது அந்த லிங்க் உண்மையில் போலியானதாக இருந்தால் எச்சரிக்கை விடுக்கும் விதமாக suspicious லிங்க் என்ற ஆப்ஷனை தெரிவித்துவிடும். இதனால் போலியான வலைத்தளங்கள் விளம்பரப்படுத்துவது தடுக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இது பீட்டா வெர்ஷன் இல் செயல்படுத்தியுள்ளது மிக விரைவில் அனைத்து பயனாளிகளுக்கும் இந்த வசதியானது ஏற்படுத்தப்படும் என கூறியுள்ளது.
No comments:
Post a Comment