இன்று உலகில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாத நாடுகளே இல்லை என்ற அளவில் தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக மேலை நாடுகளில் தொழில்நுட்ப சார்ந்த ஆராய்ச்சி மற்றும் பயன்பாடு விண்ணைத் தொடும் அளவில் உயர்ந்து வருகிறது. இந்த தொழில்நுட்ப வளர்ச்சியில் கூகுள் நிறுவனம் முக்கிய பங்காற்றுகிறது. எதிர்காலத்தில் இந்த நிறுவனம் மிகப்பெரிய தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கம் என்பதில் ஐயமில்லை.
இன்று இந்த கூகுள் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட ட்ரான்ஸ்லேட்டர் ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மொழியாக்கம் செய்து தருகிறது. அதேபோல் கூகுள் லென்ஸ் செயலி மூலம் எடுக்கப்படும் புகைப்படங்களில் உள்ள பொருட்கள் மற்றும் இடம் சார்ந்த பிற தகவல்களை உடனடியாக அளிக்கிறது. இதன் மூலம் நாம் புதிதாக கண்டறியக்கூடிய பொருட்கள் மற்றும் இடம் சார்ந்த முழுத்தகவல்களையும் பிறரிடம் கேட்காமலேயே பெறமுடியும் என்பது மிகப்பெரிய வரப்பிரசாதமே.
அதே வேளையில் AI(Artificial intelligence) செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகப்பெரிய மாற்றத்தையும் வளர்ச்சியையும் கொண்டுவரும் என்பதில் ஐயமில்லை. இது மனிதனின் மூளை போன்ற செயல்படும் திறமை கொண்ட ஒரு அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. மக்களின் கேள்விகள் சந்தேகங்கள் மற்றும் சேவைகள் போன்றவற்றிற்கு சாதாரண மனிதனை போன்றே பதிலளிக்கக்கூடிய ஒரு தொழில்நுட்பமாகும். கூகுள் duplex தொழில்நுட்பமானது மனிதனுடைய கேள்விகளுக்கு மனிதன் போன்று தகவல் அளிக்க கூடிய ஒரு முறையை உருவாக்கி வருகிறது. இது முழுமை அடைந்தால் கால் சென்டர் எனப்படும் சேவைகளுக்கு மனிதனின் உதவி இல்லாமல் செயற்கை நுண்ணறிவின் மூலம், சேவை அளிக்கும் நிறுவனங்களிடமிருந்து தகவலைப் பெற்று தகவலை கேட்கும் மக்களுக்கு மனிதன் போன்று பதில் அளிக்க கூடிய வளர்ச்சி அடையும். இதனால் இந்நிறுவனங்களில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு எதிர்காலத்தில் துறை சார்ந்த வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் என்பதில் ஐயமில்லை.
இந்த வியக்கத்தக்க மாற்றங்கள் மக்களுக்கு பல்வேறு பணிகளை எளிதாகவும், விரைவாகவும் செய்திட உதவியாக இருந்து வருகிறது. நாமும் இத்தகைய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வணிக ரீதியாக மிகப்பெரிய அளவில் பயன்படுத்தி வருகிறோம்.இவ்வாறாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப மாற்றங்கள் சமுதாயத்தில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வந்தாலும், ஒரு கட்டத்தில் தொழில்நுட்பமே தொழில்நுட்பத்தை உருவாக்கிக்கொள்ளும் சூழ்நிலை உருவாக்கினார் மனிதனின் தேவையின்றி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமே உலகை ஆளும் என்பதில் சந்தேகமில்லை.
No comments:
Post a Comment