"

Saturday, July 7, 2018

ஒரு டிவிட்டர் தகவலால் ரயிலில் கடத்தப்பட்ட சிறுமிகள் மீட்பு


உத்தரபிரதேசம் மாநிலம் முசாபர்நகரிலிருந்து பந்த்ரா செல்லும் ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவர்  கோச்சில் சில சிறுமிகள் அழுது கொண்டிருப்பதை கவனித்துள்ளார். அந்த சிறுமிகள் பயந்து நடுங்கிகொண்டும் இருப்பதை கண்ட அவர், இது தொடர்பாக ட்வீட்டர் பக்கத்தில் முழு விவரத்துடன் பதிவிட்டுள்ளார்.

இந்த தகவல் ரயில்வே அதிகாரிகள் கண்டறிந்து இதுதொடர்பாக கோரக்பூர் பகுதியில் உள்ள ரயில்வே காவலர்களுக்கு தகவல் அனுப்பினர். மேலும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் குழந்தைகள் நல வாரிய அதிகாரிகளுக்கும் ரயில்வே உயரதிகாரிகள் தகவல் கொடுத்து வரவைத்தனர். பின்பு ரயில் நிலையத்துக்கு வந்த அதிகாரிகள் சாமானியர்களின் உடையில் ரயிலில் ஏறி குறிப்பிட்ட அந்த கோச்சில் உள்ள சிறுமிகளிடம்பேச்சு கொடுத்தனர். ஆனால் அந்த சிறுமிகள் அச்சத்துடன் பேசவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அங்கு இருந்த இரண்டு ஆண்களிடம் விசாரித்தனர்.

அப்போது தெரியவந்தது என்னவென்றால் சிறுமிகள் அனைவரும் பீகாரில் இருக்கும் சம்பரன் பகுதியை சார்ந்தவர்கள் என்றும் இவர்களை இட்கா என்ற பகுதிக்கு அழைத்து செல்வதாகவும் அந்த ஆண்கள் தெரிவித்தனர், பின்னர் அவர்களை கைது செய்து சிறுமிகளை மீட்டனர். மீட்கப்பட்ட சிறுமிகள் அனைவரும் 10 முதல் 14 வயதிற்குள் உள்ளவர்கள் என்பதால் பாலியல் தொழிலுக்காக அவர்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த ரயில் பயணியின் ஒரு ட்வீட் மிகவும் உதவியாக இருந்துள்ளது. பொதுவாக சமூக வலைத்தளங்கள் தேவையற்ற தகவல்களை பரப்பி வரும் நிலையில், இது போன்ற ஒரு தகவல் சிறுமைகளை காப்பாற்ற பயனளித்துள்ளது.

No comments:

Post a Comment

Adbox