கேரட் மற்றும் ஆரஞ்சு ஜூஸ் எப்படி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.இந்த இரண்டையும் ஒன்னா கலந்து குடிச்சா தொப்பை காணாம போயிடும்!
எடைக் குறைப்பில் கேரட் கேரட்டில் டயட்டரி நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது உடல் எடையைக் குறைக்கத் தேவையான மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த நார்ச்சத்து நல்ல செரிமானத்திற்கு உதவும் மற்றும் உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றும். மேலும் கேரட் சுவை மொட்டுக்களை திருப்திப்படுத்தி, அளவுக்கு அதிகமான கலோரிகளை உணவு இடைவெளிகளுக்கு இடையே உட்கொள்வதைத் தடுக்கும்.இந்த ஆரஞ்சு நிற காய்கறி உடலை சுத்தம் செய்வதோடு, செரிமான நொதிகளை சுறுசுறுப்பாக செயல்படச் செய்து, உடலில் கழிவுகளை வெளியேற்றும் திறனை மேம்படுத்தும். அதோடு கேரட் இயற்கையாக ஒரு சிறுநீர்ப்பெருக்கி என்பதால், இது சிறுநீரகங்களின் வழியே உடலில் இருந்து அதிகப்படியான நீர்மத்தை வெளியேற்றத் தூண்டும்.ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தி, பல்வேறு நோய்களைத் தடுக்கும். இந்த சிட்ரஸ் பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளது. இவை செல்களை புதுப்பிக்கவும், இதய ஆரோக்கியம் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் செய்யும்.
தேவையான பொருட்கள்:
* கேரட் - 2
* ஆரஞ்சு - 1
* எலுமிச்சை - 1
* இஞ்சி - 1-2 இன்ச்
* தண்ணீர் - 1/4 கப்
* முதலில் நீரில் கேரட் மற்றும் ஆரஞ்சு பழத்தைக் கழுவ வேண்டும்.
* பின் கேரட்டை துண்டுகளாக்கிக் ஜூஸரில் போட்டு ஜூஸ் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஆரஞ்சு பழத்தை இரண்டு துண்டுகளாக்கி, ஜூஸ் எடுத்துக் கொண்டு, இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் 1/4 கப் நீரை ஊற்றிக் கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் 2-3 துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்தால், தொப்பை மற்றும் உடல் எடையைக் குறைக்கும் ஜூஸ் தயார்.
No comments:
Post a Comment