இந்தியாவின் நிலப்பரப்பை காட்சிப்படுத்தும் புகைப்படத்தில் ஆங்காங்கே காணப்படும் சிவப்பு நிற புள்ளிகளை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது. அந்த சிவப்பு புள்ளிகள் என்னவென்று தெரியுமா.?
வேறொன்றுமில்லை, இந்தியாவில் பற்றி எரிந்த நெருப்புகளே ஆகும்.
பிளாக் கார்பனை கக்குகிறது என்பதும், இந்த பிளாக் கார்பன் ஆனது, புவி வெப்பமயமாதலை மிகவும் அதிகப்படுத்தும் ஒரு கூறு ஆகும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. காட்டுத்தீகளாக இருக்கலாம் என்று கருதப்பட்டது.வெளியான வரைப்படத்தில் காணப்படும் புள்ளிகள் ஆனது, பெரும்பாலும் வனப்பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீகளாக இருக்கலாம், அது கோடை காலத்தின் வெப்பத்தை தாங்காமல் பற்றி எரிந்த இடங்களாக இருக்கலாம் என்று கருதப்பட்டது.
ஆனால் இவைகள் பெரும்பாலும் கிராப் பையர்களாக (crop fires) இருக்கலாம், அதாவது, விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களில் ஏற்பட்ட தீயாக இருக்கலாம் என்று கூறியுள்ளது அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. நெல் துருவல்கள் எரிக்கப்படுவது என்பது, பழங்காலத்தில் இருந்தே விவசாயிகளிடையே இருக்கும் ஒரு பொதுவான நடைமுறையாகும். ஏனெனில் அவைகளை தீவனமாக்க முடியாது. ஆனால், கோதுமைத் துருவல்களை எரிக்கும் பழக்கம் மிக மிக சமீபத்தில் கிளம்பிய ஒரு பழக்கமாகும்.
No comments:
Post a Comment