"

Tuesday, May 29, 2018

அனைத்திலும் பதஞ்சலி பாபா ராம்தேவ்ன் பதஞ்சலி சிம்..! எங்கு எப்போது வாங்குவது


யோக குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி தயாரிப்புகள் மக்களிடையே அமோக ஆதரவைப் பெற்று சிறப்பான இடத்தில் உள்ளது. தற்சமயம் பதஞ்சலி நிறுவனமானது தொலைதொடர்புத் துறையில் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து புதிய சிம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய சிம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே தொலைத் தொடர்புத் துறையின் ஆதிக்கத்தை செலுத்தி வரும் நிறுவனத்திற்கு கடும் சவாலாக இந்த புதிய நிறுவனம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பதஞ்சலி நிறுவனம் பிஎஸ்என்எல் உடன் இணைந்து சுதேசி சம்ரித்தா  என்ற சிம் சிம் கார்டு வெளியிட்டுள்ளது.

இது மூன்று வகையான திட்டங்களை கொண்டுள்ளது, முதல் திட்டமானது ரூபாய் 144 ரீசார்ஜ் செய்து நாளொன்றுக்கு 2ஜிபி டேட்டா மற்றும் இலவச அழைப்புகளை கொண்டுள்ளது. இது 30 நாட்கள் validity கொண்டுள்ளது. இரண்டாவது திட்டமானது ரூபாய் 792 ரீசார்ஜ் செய்து தினமும் 2 ஜிபி டேட்டா மற்றும் அளவில்லா இலவச கால்களைக் கொண்டு 180 நாட்கள் வரை செல்லுபடியாகும். திட்டம்  ரூபாய் 1,584 ரீசார்ஜ் செய்து ஒரு வருடம் வேலிடிட்டி உடன் தினமும் அளவில்லா கால்கள் மற்றும் 2 ஜிபி டேட்டா கொண்ட திட்டமாகும். 

முதல் கட்டமாக கட்டமாக பதஞ்சலி சிம்கார்டு பதஞ்சலி ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ளது. அதேபோல் இந்த சிம் கார்டை பயன்படுத்துபவருக்கு  இரண்டரை லட்சம் முதல் 5 லட்சம் வரை ஆயுள் காப்பீடு வழங்கப்பட உள்ளது. மேலும் 10 சதவீத தள்ளுபடி விலையில் பதஞ்சலி தயாரிப்புகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. மிக விரைவில் இந்த சிம் கார்டுகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிகிறது.


பிளஸ் 2 /பத்தாம் வகுப்பு உடனடி சிறப்பு தேர்வு மற்றும் தேர்வு அட்டவணை விவரம்

No comments:

Post a Comment

Adbox