"

Thursday, May 24, 2018

உடலில் ஏற்படும் பருக்களை சரி செய்ய வைத்தியம்


முகப்பருக்கள் முகத்தில் மட்டும் தான் தோன்றும் என்று அர்த்தமில்லை சிலருக்கு உடலிலும் கூட குறிப்பாக தோள்பட்டைகளில் இந்த பருக்கள் உருவாகலாம். இது பெண்களை விட ஆண்களை அதிகம் பாதிக்கிறது. இது தோள்பட்டையில் உள்ள இறந்த செல்களால் உருவாகிறது மேலும் இந்த இறந்த செல்கள் வேர்வையில் இணைந்து பாக்டீரியாக்களை உருவாக்கி அதன்மூலம் வீக்கம் மற்றும் சிவந்துபோதல் ஏற்படுகின்றன. இதை எளிதில் சில வீட்டு பொருட்களின் மூலமாக குணப்படுத்தலாம்.


தோல்பட்டை பருக்களை சரி செய்ய ஒரு பாத்திரத்தில் சூடான நீருடன் சமையல் உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும். பின்னர் தூய்மையான காட்டன் துணியால் பாதிக்கப்பட்ட இடத்தை பத்து நிமிட இடைவெளியில் சிலமுறை உத்திரம் கொடுக்கவும். சில நாட்களுக்கு தொடர்ந்து செய்து வந்தால் குணமாகும்.

மேலும் ஆப்பிள் சீடர் வினிகரை பயன்படுத்தியும் தோலில் ஏற்படும் பருக்களை சரி செய்யலாம் ஆப்பிள் சீடர் வினிகர் பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தும் தோலில்  பி எச் அளவை செய்வதன் மூலமாக தோல்பட்டை பருக்களை சரிசெய்யலாம். ஆப்பிள் சீடர் வினிகர் ஒரு பங்கும் மூன்று பங்கு நீரையும் கலந்து மிதமான சூட்டில் ஒத்தடம் கொடுக்கவும் தொடர்ந்து சில நாட்களுக்கு செய்வதின் மூலமாக நல்ல பலனை பெறலாம்.

அதேபோல் டீ ட்ரீ ஆயில் பயன்படுத்தி தோல்பட்டை பருக்களை சரி செய்யலாம் டீ-ட்ரீ ஆயிலை வெந்நீரில் கலந்து பாதிக்கப்பட்ட இடங்களை சுத்தம் செய்வதின் மூலமாக பருக்கள் கட்டுப்படுத்த முடியும் மேலும் டீ ட்ரீ ஆயில் தோலில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளை சரி செய்யவும் தன்மை கொண்டது.




பிடித்தமானவருக்கு அன்பான மற்றும் அவசியமான ஓரு பரிசு பொருள்....!




ஆர்டர் செய்ய கிளிக் செய்யவும்



No comments:

Post a Comment

Adbox