WhatsApp இன்று நம் வாழ்வில் ஒரு பகுதியாக மாறிவிட்டது. இதில் நண்பர்கள், குடும்ப உறுப்பினர் மற்றும் அலுவலகம் சார்ந்த எல்லா இடங்களிலும் செய்தியை அனுப்புகிறோம். நாளொன்று நூற்றுக்கணக்கான நூல்களையும், மீடியா கோப்புகளையும் பெற்றுக்கொள்கிறோம். தேவையற்ற கோப்புகளை நீக்கும்போது, தவறுதலாக வீடியோ மற்றும் புகைப்படம் என்று ஏதாவது ஒன்றை நீக்குகிறோம். அப்படி தவறாக நீக்கப்பட்ட கோப்புகளை மீட்க WhatsApp இப்போது ஒரு தீர்வை கொண்டு வந்துஉள்ளது.
அதன் படி, ஆண்ட்ராய்டில் உள்ள WhatsApp பீட்டா பயனர்கள் இப்போது தற்செயலாக நீக்கப்பட்ட கோப்புகளை மீட்டெடுக்கலாம். எனவே இது எவ்வாறு இயங்குகிறது ஏன்றால் உங்கள் நண்பரிடமிருந்து ஒரு படத்தை நீங்கள் பெற்று, அது உங்கள் கேலரியில் உள்ள WhatsApp கோப்புறையிலிருந்து தற்செயலாக நீக்கப் பட்டுவிட்டால். கோப்பை மீண்டும் தரவிறக்கம் செய்ய முடியாது. இருப்பினும், சமீபத்திய பீட்டா பதிப்பில், நீக்கப்பட்ட படத்தை மீண்டும் மீட்டெடுக்க இயலும், WhatsApp அந்த சாட் குரூப்க்கு சென்று அந்த படத்தை மீண்டும் பதிவிறக்க செயலாம். எனினும், நாம் WhatsAppல் டெலிட் செய்த செய்தியை திரும்ப பெற முடியாது. இந்த அம்சம் Android இல் பீட்டா பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
No comments:
Post a Comment