"

Sunday, April 15, 2018

இயற்கை பிரச்சினை பற்றிய பயமே இனி நமக்கு தேவையில்லை உஷாரா இருக்க புதிய ஆப்..,


மழைகாலங்களில் திடீரென உருவாகும் இடி-மின்னல்களால் எந்த உயிர்சேதமும் ஏற்படாமல் இருக்க அதனை பற்றி முன்கூட்டியே எச்சரிக்கும் செல்போன் செயலி இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையதால் வெளியிடப்பட்டு உள்ளது.இயற்கை பேரிடர்களை பற்றி முன்கூட்டியே பொதுமக்கள் தெரிந்து கொண்டால் அவர்கள் கவனமாக இருப்பார்கள் என்ற நோக்கில் புதிய செல்போன் செயலி ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது.இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் (கே.எஸ்.என்.டி.எம்.சி.) சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது ,மேலும் இந்த செல்போன் செயலிக்கு 'சிடிலு' ( sid-ilu ) என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த செல்போன் செயலியை 'ஸ்மார்ட் போன்' வைத்திருப்பவர்கள் playstore ல் இருந்து பதிவிறக்கம் (டவுன்லோடு) செய்யலாம்.



பிறகு சம்மந்தப்பட்ட நபர் தனது செல்போன் எண்ணை அந்த செயலியில் பதிவு செய்யவேண்டும். இதைத்தொடர்ந்து அந்த செல்போன் எண்ணுக்கு மழைக்காலங்களில் ஏற்படும் இடி-மின்னல் குறித்த எச்சரிக்கை அந்த செல்போன் செயலி மூலம் அறிவுறுத்தப்படும்.

No comments:

Post a Comment

Adbox