நெஞ்சுப் பகுதியில் அசௌகரியம், வயிற்று உப்புசம், வாய்வுத் தொல்லை, ஏப்பம், சாப்பிட ஆரம்பிக்கும் போதே வயிறு நிறைவு போன்றவக்கு காரணம் அளவுக்கு அதிகமான அமிலம் இரைப்பையில் சுரப்பது தான். அமில சுரப்பை நடுநிலை செய்வதன் மூலம் குணமாக்கலாம்.
கோளாற்றை சரி செய்ய ஆப்பிள் சீடர் வினிகர் வெதுவெதுப்பான நீரில் கலந்து சிறிது தேன் சேர்த்து உண்பதற்கு முன் தினமும் 1-2 முறை குடிக்க வேண்டும்.
1 டீஸ்பூன் இஞ்சி சில நிமிடம் நீரில் போட்டு தேன் கலந்து டீயை தினமும் 2-3 முறை என ஒரு வாரம் தொடர்ந்து குடிப்பதால் சிறப்பான மற்றம் காணமுடியும்.
சீமைச்சாமந்தி வயிற்றில் சுரக்கும் அமிலங்களை நடுநிலையாக்கி, எனவே சீமைச்சாமந்தி பூவை ஒரு கப் சுடுநீரில் போட்டு 5 நிமிடம் வைத்து சிறிது தேன் கலந்து பருக நலம்.
டீஸ்பூன் பேக்கிங் சோடாவை டம்ளர் நீரில் கரைத்து தேன் அல்லது எலுமிச்சை கலந்து உணவுக்கு பின் இந்த டீஐ பருக வேண்டும்.
மேலே குறிப்பிடப்பட்டு உள்ள முறைகளை தங்களின் உடல் நிலைக்கு ஏற்ப பயன்படுத்தவும் சில உணவு முறைகள் பாதகமாகவும் அமையும் எனவே தங்கள் உடல்நிலை சார்ந்து பயன்படுத்தவும்.
No comments:
Post a Comment