கர்நாடகாவிலும் மோடி அலை வீசுவதாகவே தெரிகிறது. மக்கள் கூறியுள்ளனர். ஏபிபி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் மோடிக்கு ஆதரவு அளிப்பதாக 43 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர். ராகுல்காந்திக்கு வெறும் 28 சதவிகிதம் மக்கள் ஆதரவு மட்டுமே உள்ளது.
சித்தராமைய்யா முதல்வராக 30 சதவிகிதம் பேர் கூறினாலும், ராகுல்காந்திக்கு மக்கள் ஆதரவு குறைவாகவே உள்ளது. அதே நேரத்தில் எடியூரப்பா முதல்வராக 25 சதவிகிதம் பேர் ஆதரவு அளித்தாலும் மோடிக்காகவே 43 சதவிகிதம் பேர் வாக்காளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடகாவில் ஏற்கனவே ஒருமுறை பாஜக ஆட்சி அமைந்துள்ளது. எனவே அந்த மாநிலத்தில் கூட ஆட்சியை பிடிக்க முடியாவிட்டால், மோடி அசைக்க முடியாத தலைவர் என்ற அந்தஸ்தை இழந்துவிடுவார் என நினைக்கிறார்கள் பாஜகவினர். எனவே, கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்றேயாக வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு உள்ளது. இந்த சூழ்நிலையில் பாஜகவினருக்கு நம்பிக்கை தரும் விதமாகவே ஏபிபி கருத்துக்கணிப்பு அமைந்துள்ளது.
No comments:
Post a Comment