"

Sunday, April 22, 2018

இனி அந்த கவலையில்லை குறைந்த கட்டணத்தில் ஊட்டிக்கு சுற்றுலா தமிழக அரசு


மலைகளின் அரசி ஊட்டிக்கு விடுமுறை நாட்களிலும், சீசன் சமயத்திலும் வெளிநாடு, வெளிமாநில, மற்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டகளில் இருந்து சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். கார், வேன், பஸ்களில் சுற்றுலா வருபவர்கள் அனைத்து சுற்றுலா இடங்களையும் ஒரே நாளில் பார்வையிட்டு சென்று விடுவார்கள். ஆனால் அரசு பேருந்துகளில் வருபவர்கள் ஒருநாளைக்கு ஒரு சில இடங்களை மட்டும் பார்த்துவிட்டு செல்வார்கள்.

ஆனால் இனி அந்த கவலையில்லை, இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தமிழக அரசு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மினி சுற்று பேருந்து இயக்க முடிவு செய்திருக்கிறது. இந்த சுற்றுலா மினி பேருந்துகள், இன்று முதல் தொடங்குகிறது.
ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து இந்த பஸ்கள் புறப்பட்டு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலை சிகரம், தேயிலை பூங்கா, தேயிலை அருங்காட்சியகம், ரோஜா பூங்கா ஆகிய இடங்களில் இறக்கி விடப்படுவார்கள்.


இதற்காக ஒரு பயணிக்கு ரூ. 100 வசூல் செய்யப்படுகிறது. சுற்றுலா பயணிகள் இந்த இடங்களை சுற்றி பார்த்து விட்டு அடுத்த பஸ்சில் ஊட்டி மத்திய பஸ் நிலையம் வந்து விடலாம். திரும்பி வரும் போது கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. சுற்றுலா பயணிகள் தாங்கள் முதலில் சென்ற பஸ் டிக்கெட்டை காண்பித்தால் மட்டும் போதும்.


மேலும் இந்த சேவை தற்போது சனி, ஞாயிறு மற்றும் கூட்ட நெரிசல் உள்ள நாட்களில் மட்டும். வரும் மே முதல் இந்த பஸ்கள் வழக்கமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா மினி பேருந்து சேவை ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளுக்கு பெரும் வசதியாக உள்ளது என சுற்றுலா பயணிகள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Adbox