டெல்லியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த கொடூரமான செயலை செய்த கமால் தீப் என்ற 32 வயது நிரம்பிய டெல்லி பட்டதாரி பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
ப்ளிப்கார்ட்டில் ஆர்டர் செய்த பொருளை டெலிவரி செய்ய அதிக நாள் எடுத்ததால், டெலிவரி பாயை பெண் ஒருவர் கத்தியால் குத்தி இருக்கிறார்.
கேசவ் என்ற ப்ளிப்கார்ட்டில் வேலை செய்யும் டெலிவரி பாய் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதில் மோசமான திருட்டு சம்பவம் ஒன்றும் நிகழ்ந்துள்ளது.
கமால் தீப் என்ற அந்த பெண் 11 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மொபைல் போனை ப்ளிப்கார்ட்டில் ஆர்டர் செய்து இருக்கிறார்.
ஆனால் ஆர்டரை டெலிவரி செய்ய வேண்டிய கேசவ் டெல்லிக்கு புதியவர் என்பதால் ஒருநாள் தாமதமாக டெலிவரி கொடுக்க சென்றுள்ளார். ஆனால் அதற்குள் அந்த பெண் கேசவை பலமுறை போன் செய்து திட்டியுள்ளார்.
கமால் தீப்பும் அவரது தம்பியும் சேர்ந்து கேசவை கத்தியால் 20 முறை குத்தியுள்ளனர். ஆனால் கேசவ் அவர்களிடம் இருந்து தப்பித்து தெருவிற்கு ஓடி தப்பித்துள்ளார். தற்போது இவர் மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
கமால் தீப் திருடவும் செய்துள்ளார். டெலிவரி செய்ய வந்த கேசவ் பாதியில் ஓடியதை அடுத்து எல்லா பணம், பொருள்களையும் எடுத்து வீட்டிற்குள் மறைத்துள்ளார். 40,000 ரூபாய் பணம், 1 லட்சம் மதிப்புள்ள பொருட்களை அவர் திருடியதாக கூறப்படுகிறது.
கேசவ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கமால் தீப்பும் அவரது தம்பியும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் வீட்டு சிசிடிவியில், கத்தியால் குத்திய சம்பவம் பதிவாகி உள்ளது.
No comments:
Post a Comment